Posts

Showing posts from August, 2009

ஒரு திருமணத்தின் முன்னரும் பின்னருமான ஒரு உரையாடலை ஒரே உரையாடலில் அடக்கும் சிறப்பு

Image
திருமணத்திற்கு முன் அவன் : இதுதான் கடைசி… இனிமேலும் என்னால காத்திருக்க முடியாது? அவள் : என்னைக் கைவிட்டுவிடுவீர்களா.. அவன் : என்ன பேசுற நீ… நான் எப்பவுமே அப்படி நினைத்ததில்லை…….. அவள் : என்னை காதலிக்கிறீர்களா…? அவன் : ஆமா.. அது எனக்குள்ளே உள்ள தாகம்… அவள் : எப்பவாவது என்னை ஏமாற்ற நினைப்பீர்களா…? அவன் : ஏன் இப்படி கேவலமா சிந்திக்கிற…. அவள் : என்னை முத்தமிடுவீர்களா…? அவன் : ம்ம்ம்… வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்… அவள் : என்னை அடிப்பீர்களா? அவன் : என்னம்மா இது… நான் அந்தமாதிரி ஆள் இல்லை….! அவள் : நான் உங்களை நம்பலாமா? அவன் : ம்ம்ம். அவள் : அன்பே…! திருமணத்தின் பின்…. அப்படியே கீழிருந்து மேல் நோக்கிப்படிக்கவும். குறிப்பு( இது சொந்த ஆக்கம் கிடையாது.ஆங்கிலத்தில் வந்ததை தமிழில் மொழி பெயர்த்துள்ளேன் )

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

Image
1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது. 2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது.. உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும். 3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. 4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும். மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே. அரசியல்வாதிகளில் பலர் தொந்தியுடன் இருப்பதை நீங்கள் காணலாம். ஏனெனில் ஒருவரது தொந்தியின் அளவிற்கேற்ப அவரது புகழும் வளரும். தொந்தியார் குறைந்தால் தொண்டர் குறைவர். தொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே தொந்தி வளர்த்தேன். தொகுதி வளர்த்தேனே. என்பதே பல அரசியல்வாதிகளின் வேதவாக்கு. தொந்தி ஏன் சதுரமாக அல்லது செவ்வகமாக இல்லாமல் உருண்டை வடிவத்தில் இருக்கிறது? என்ற வினா பலரது மனதில் எழும். தொந்திய...

ஜோக்ஸ்

Image
என்னடா...இந்தத் தியேட்டர்ல 'என்னடா...இந்தத் தியேட்டர்ல ஒவ்வொரு சோ முடிஞ்சதும் கூட்டறாங்க ?' 'படம் ரொம்ப குப்பையா இருக்காம் !' ****************************** 'வேலைக்காரியோட நான் சிரிச்சுப் பேசினா, என் மனைவிக்குப் பிடிக்காது !' 'இது பரவாயில்லையே ! என் மனைவியோடு நான் சிரிச்சுப் பேசினா எங்க வேலைக்காரிக்குப் பிடிக்காது !' ****************************** இந்த மாதிரி காதலன் கிடைக்க நான் குடுத்துவெச்சிருக்கணும் !' 'ஏன்... கட்டின புடவையோட வந்தா போதும்னு சொல்லிட்டானா ?' 'அட, கட்டின புருசனோட வந்தாலும் பரவாயில்லைன்னு சொல்லிட்டான் !' ****************************** 'நம்ம காதல் புனிதமானது சிவா !' 'அப்ப கல்யாணம் அது இதுன்னு சொல்லி, அந்தப் புனிதத்தைக் களங்கப்படுத்தக் கூடாது, சரியா ! ****************************** நம்மோட கள்ளத்தொடர்பு தெரிஞ்சுட்டதால, உன்னை வேலையை விட்டு நிறுத்த போறா என் மனைவி !' 'கவலைப்படாதீங்க எஜமான், உங்களுக்கு நான் வெளியில இருந்து ஆதரவு தர்றேன் !' ******************************

அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இதோ உங்களுக்கான சில டிப்ஸ்.

Image
1. உங்கள் அலுவலகத்தில் யார் அடுத்து விடுபட போகிறார்கள் என துப்பறிந்து கண்டறியுங்கள். 2. உங்க முதலாளிக்கு சும்மா ஒரு Blank Call குடுங்க. 3. உங்க yahoo ல இருந்து Gmail கு ஒரு மின்னஞ்சல் பண்ணுங்க. உடனே Gmail ஐ திறந்து பாருங்க. மின்னஞ்சல் வர எவ்வளோ நேரம் ஆகுதுன்னு கண்டுபிடிங்க. 4. மற்றவர்கள் பயன்படுத்தும் நாற்காலி, பிரிண்டர் இவைகளை இடமாற்றம் செய்து அவர்களுக்கு கோபம் உண்டாக்குங்கள். 5. உங்கள் கைவிரல்களை எண்ணுங்கள், இன்னும் போர் அடிக்கிறது என்றால், கால் விரல்களையும் சேர்த்து எண்ணுங்கள். 6. மற்றவர்கள் வேலை செய்யும் போது அவர்கள் முகபாவனைகளை பாருங்கள். கண்டிப்பாக சிரிப்பு வரும். அதுபோல் உங்கள் முகபாவனைகளையும் அவ்வப்போது மாற்றுங்கள். அப்போது தான் நீங்கள் வேலை செய்வது போல் தோன்றும். 7. இரண்டு மணி நேரம் சாப்பிட எடுத்துக்கொள்ளுங்கள். சமுதாய பிரச்சனைகளை அலசுங்கள். 8. விசில் அடிக்க கற்றுக்கொள்ளுங்கள். 9. போன வாரம் அல்லது போன மாத நாளிதழை திரும்ப படிங்க. 10. தேநீர் பருகிய கப்பை குறிபார்த்து குப்பை தொட்டியில் ஏறிய பயிற்சி எடுங்கள். 11. உங்கள் கணினியில் ஒரே சமயத்தில் எத்தனை அப்ளிகேசன் திறக்க முடியும் என்...

வாங்க சிரிக்கலாம்

Image
நடிகருக்கும், மருத்துவருக்கும் என்ன ஒற்றுமை? ரெண்டு பேரும் ஏதாவது ஒரு தியேட்டர்ல யாரையாவது போட்டு அறுத்துக்கிட்டிருப்பாங்க ---------------------------------------------------------------------------------- நேற்று என் கச்சேரிக்கு வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்... வரணும்னுதான் சார் நினைச்சேன். அதுக்குள்ள வேற கஷ்டம் ஒண்ணு வந்துட்டுது. ---------------------------------------------------------------------------------- உன் வீட்டுக்காரர் காலையில கோலமெல்லாம் போடுறாராமே..? யார் சொன்னா? என் வீட்டுக்காரர்தான். காலையில கோலம் போடும்போது, பார்த்தாராம். ---------------------------------------------------------------------------------- பொண்ணு கிளி மாதிரி இருப்பாள்னு தரகர் சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... என்னாச்சு? பேசியதையே திரும்பத் திரும்பப் பேசி கழுத்தை அறுக்கிறாளே* சிவா வழி நடத்துனர் ------------------------------------------------------------------------------ யோசனையே இல்லாம மெகா சீரியஸ் மாதிரி படம் எடுத்துட்டோம்* அப்புறம்.. என்ன பண்ணுனீங்க..? பேசாம, நாலு இண்டர்வெல் விடறதா முடிவு பண...

சிரியுங்கள்

இன்று வாழ்வில் நாம் திரும்பிப் பார்க்கும் திசையில் எல்லாம் தெரிபவை இரண்டு. அவைகளில் ஒன்று திருப்தி. மற்றென்று பேராசை. இந்த இரண்டும் தனித்தனியாக்கூட இல்லை. உள்ளங்கையும் புறங்கையும் போல ஒன்றின் இருபக்கங்களாக இருக்கின்றன. யாரிடம் பேராசை இருக்கிறதோ அவரிடம் மறுபுறம் திருப்தியும் இருக்கிறது. கிடைத்தற்குப் திருப்திப்பட்டுக் கிடைக்க வேண்டியதற்காக உழைக்கும் ஆரோக்கியமான மனநிலை தென்படவில்லை. காரணம், மன இறுக்கம், மன உளைச்சல். இந்த மன புகைச்சலிருந்து விடுபட உதவுவது மனம் விட்டு சிரிப்பது. N.S. கிருஷ்ணன் பாடிய சிரிப்பு பாடலைப் பலரும் கேட்டு இருக்கலாம். சில சிரிப்புகளை சிறிது அலசுவோம். வாய்விட்டு சிரிப்பது - நமட்டு சிரிப்பு - வாயை மூடிக்கொண்டு சிரிப்பது - ஓகோ என்று சிரிப்புது- அவுட்டு சிரிப்பு - வெடிச்சிரிப்பு - 'களுக்'கென்று சிரிப்பு - பயங்கரமாய் சிரிப்புது - புன்சிரிப்பு - வயிறு வலிக்க சிரிப்புது - விழுந்து, விழுந்து சிரிப்புது - குபீரென்று சிரிப்பு - மனதுக்குள்ளே சிரிப்பு - உதட்டளவில் சிரிப்பு , வெறிச்சிரிப்பு - கலகலவென்று சிரிப்பு - 'பக்'கென்று சிரிப்பு- குலுங்ககுலுங்க சிரிப்பு- கட...

நேர்முகத்தேர்வில் சர்தார்ஜி -ஜோக்ஸ்

Image
நேர்முகத்தேர்வில் சர்தார்ஜி சர்தார்ஜி ஒருவர் இரயில் நிலைய அதிகாரி பதவிக்கான இண்டர்வியூவில் கலந்து கொண்டார். இரண்டு இரயில்கள் அதிவேகமாக எதிரெதிரே ஒரே பிளாட்பாரத்தில் வருவதை அறிந்தால் நீங்கள் முதலில் என்ன செய்வீர்கள் என்று அதிகாரி கேட்க, அதற்கு சர்தார்ஜி இவ்வாறு பதில் சொன்னாராம், "நான் முதலில் திரு. பாண்டா சிங் அவர்களுக்குத் தகவல் தெரிவிப்பேன்". யார் அந்த பாண்டா சிங் என்று அதிகாரி கேட்டார். சர்தார்ஜி சொன்னார், "பாண்டா சிங் என் தம்பி. அவன் இது வரை ஒரு இரயில் விபத்தைக் கூட நேரில் பார்த்ததேயில்லை." *************************** ஒரு ஜோடி ஒரு ஜோடி ஹோட்டலில் ரூமெடுக்க போயிருந்தார்கள்.ரூமெடுத்து விட்டு மனைவி சோர்வாக இருக்க தூங்க சொல்லி விட்டு கணவன் கீழே இருந்த பாருக்கு போய் விட்டான். அவள் படுத்து தூங்க சரியாக ஒரு நிமிடத்தில் அறைக்கு சற்று வெளியே ஒரு ரயில் மிக வேகமாக போனது. சரி வெளியூரில் சகஜம் என்று திரும்ப தூங்க அதே போல ஒரு ரயில் போனது.உடனே மேனேஜரை பார்த்து இப்படி ரயில் போகிற சப்தத்தால் தூங்க முடியவில்லை என்று சொல்ல அவனும் அறைக்கு வந்து பார்த்தான். "இதோ இந்த பெட்டில் படு...

வாங்க சிரிக்கலாம்,சிரிக்கலாம்

Image
சில மனிதர்கள் முகத்தில் சிரிப்பைக் காணமுடிவதில்லையே, அது என்ன குணம்? அவர்களை என்ன வென்று சொல்வது? அவர்களை எப்பிரிவில் சேர்ப்பது? இந்த கேள்விகளுக்கு ஒரே வரியில் பதில் சொல்ல வேண்டுமென்றால் , 'மனிதன் சிரிக்கப்பிறந்தவன், ஆனால், சிரிக்க மறந்தவன்' என்றுதான் சொல்லவேண்டும். குழந்தை பிறந்த சில தினங்களிலேயே தன் பொக்கை வாயைத்திறந்து புன்னகைக்கத் துவங்கிவிடுகிறது . பிறந்த 20வது வாரத்தில் சிரிக்க ஆரம்பித்துவிடுகிறது. 6வது மாதத்தில் சத்தம்போட்டுச் சிரிக்கத் துவங்குகிறது. கண்பார்வை அற்ற குழந்தைகூட புன்னகைக்கிறது. எனவே, குழந்தைகள் புன்னகைப்பது, சிரிப்பது என்ற உணர்ச்சிகள், அதன் தாயைப் பார்த்துக் கற்றுக்கொள்வது அல்ல என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். சின்னக் குழந்தைகள் ஒரு நாளில் 200 லிருந்து 400 முறை சிரிக்கிறார்கள். ஆனால், பெரியவர்களோ 20 முறைதான் சிரிக்கிறார்கள் என்று ஒரு நூலில் காணப்படுகிறது. இதைப் பார்க்கும்போது, ஒரு நாளில் 200 லிருந்து 400 முறை சிரித்துக்கொண்டிருந்த நாம், 20 முறை மட்டுமே நம் சிரிப்பைக் குறைத்துக்கொண்டதே நமது அநேக சிக்கல்களுக்குக் காரணம். " மனவியல்" என்ற ஒன்று வளர்வதற்...

தத்துவம் மச்சி தத்துவம்

Image
என்ன பாக்குற? பேரப் பார்த்தாலே ச்சும்மா அதிருதுல்ல!!! அப்படி அதிரலைன்னா, 'செல்'ல வைப்ரேட்டிங் மோடுக்கு மாத்து. திரும்பவும் அனுப்பறேன். அதிரும் ***** நேத்து உன்னையும் உன் தம்பியையும் பார்த்தேன்.நிச்சயமா எனக்கு ஏதோ அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது!...பின்னே?ரெண்டு கழுதைகளைச் சேர்ந்து பார்த்தால் அதிர்ஷ்டம் அடிக்குமாமே?!" ****** துடிப்பது என் இதயம்தான். ஆனால் அதன் உள்ளே இருப்பது நீ. வலித்தால் சொல்லிவிடு. நிறுத்தி விடுகிறேன். துடிப்பதை அல்ல. இப்படி ஓவரா ரீல் விடுவதை. ***** ஏன்.... தண்ணி தெளிச்சி கோலம் போடுறாங்க தெரியுமா...! . . . . . . . . . . . . கோலம் போட்டு தண்ணி தெளிச்சா கோலம் அழிஞ்சிடும்ல..! ***** பம்பர் பரிசு: எனக்கு நீங்கள் தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பினால், வெற்றி பெறலாம்... 1. ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள காருடைய புகைப்படம். 2. 29'' இஞ்ச் கலர் டிவியோட அட்டைப் பெட்டி. 3. சிங்கப்பூர் போகிற விமானத்திற்கு டாட்டா காட்டும் வாய்ப்பு 4. மெகா பரிசு: நட்சத்திர ஹோட்டலில் என்னுடன் மதிய உணவு அதுவும் உங்கள் செலவில். சீக்கிரம் முந்துங்கள்!!!! ***** முடியாது முடியாது.. சில விஷயத்தை ...

நல்ல மனைவி

Image

நகைச்சுவை உரையாடல்கள்… பார்த்திபனும்...வைகைப்புயல் வடிவேலுவும்

Image
பார்த்திபன் ஒரு கடை வைத்திருக்கிறார்...அந்த பக்கம் வடிவேலு போண்டா மணியுடன் வருகிறார்...அவரைப் பார்த்த பார்த்திபன்.. பார்த்திபன் - (தனக்குள்) அடடா..இவன் வந்துட்டானா? கொஞ்சம் லொள்ளு பண்ணுவோம் (வடிவேலுவை பார்த்து) வாங்க...வாங்க... வடிவேலு - என்னையா? அடடா..இதுவரை யாரும் என்னை வாங்கன்னு மரியாதையா கூப்பிட்டதில்லை...இவன் இரண்டு வாட்டி வேற கூப்பிடரானே!! (உள்ளே நுழைகிறார்) பார்த்திபன் -வாங்க..என்ன வேணும்.. வடிவேலு - (அப்போதுதான் அவரை நன்கு பார்க்கிறார்) அடடே..மவனே..இவனா..(போண்டாவை அடிக்கிறார்) ஏண்டா? முன்னமே இவன் இருக்கான்னு சொல்லக்கூடாது.. (வெளியேற நினைக்க) பார்- டேய்..உள்ள வந்துட்டு எதையாவது வாங்காம எப்படி போவே வடி- அண்ணே..நீங்க தானே வாங்க..வாங்க..னு சொன்னீங்க.. பார்-உன்னை சொல்லலைடா..ஏதாச்சும் வாங்க வாங்கன்னேன் வடி-அண்ணே..நல்லா பேசறீங்க..எனக்கு ஆனா எதுவும் வாணாங்க பார்-இன்னிக்கு நீ எதுவம் வாங்கலே..மவனே துபாய்ல நீ என்ன பண்ணினேன்னு ஊர்ல சொல்லிடுவேன்.. வடி- வேணாம்னே..(அங்கு உள்ள புத்தகங்களை பார்வையிடுகிறார் இருப்பதிலேயே..சின்னதாக ஒன்றை எடுக்கிறார்) அண்ணே இது விலை என்ன.. பார்-10 ரூபாய்...

நாயின் திருமணம்

Image

உலகின் மிகஉயரமான நகரும் படிகள்

Image

இன்றைய மெகா ஜோக்:

சார், நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க? கல்யாணத்துக்கு முன்னாடியா, பின்னாடியா? கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லுங்களேன். கல்யாணத்துக்கு முன்னாடி, முருகர் தான் ரொம்ப புடிக்கும். அப்போ பின்னாடி. அது ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேண்டாத தெய்வம் இல்லை. ********************************************* குவார்ட்டர் கோவிந்தன் : டாக்டர், நான் போதைல தெரியாம ஒரு எலியை உசுரோட முழுங்கிட்டேன். என்னை காப்பாத்துங்க! டாக்டர் : இந்தாங்க, இந்த எலிமருந்தை சாப்பிட்டுங்க. எலி செத்திடும். அப்புறம் ஈசியா வெளியில் எடுத்திடலாம்! ********************************************* மாப்பிள்ளை கோடியில் புரள்றவருன்னு சொல்றீங்க, அப்புறம் ஏன் அவருக்குப் பொண்ணு கொடுக்க மாட்டேங்கறாங்க? தண்ணி அடிச்சுட்டு, எப்பப்பாரு தெருக்கோடியில் புரள்றவனுக்கு யார் சார் பொண்ணு கொடுப்பாங்க? ********************************************* அம்மா, நாங்க புதுசா ஒரு முதியோர் இல்லம் ஆரம்பிக்கப் போறோம். உங்களால் ஏதாவது தர முடியுமா? தாராளமா, என்னோட மாமியாரையும் மாமனாரையும் தர்றேனே. ********************************************* மனைவி: இந்த...

ரஜினிகாந்த் Software Engineering ஆகஇருந்தால்- ஒரு நகைச்சுவை பதிவு

Image
பக் எப்ப வரும், எப்படி வரும்ன்னு யாருக்கும் தெரியாது ஆனா, வர வேண்டிய நேரத்துல கரெக்டா வந்துடும் ----- நீ விரும்புற ப்ராஜக்ட்ல ஓர்க் பண்ணுறத விட உன்னை விரும்பற ப்ராஜக்டல ஒர்க் பண்ணினா உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும். ----- கஷ்டப்படாம பிக்ஸ் பண்ணுற பக் க்ளோஸ் ஆகாது அப்படி க்ளோஸ் ஆனாலும் ரீ-ஓபன் ஆகாம போகாது. ----- ப்ரோமோஷன், ஹைக், ஆன்சைட் இது பின்னாடி நாம போக கூடாது இதெல்லாம்தான் நம்ம பின்னாடி வரணும் ----- கை அளவு லாஜிக் எழுதினா, அது நம்ம காப்பாத்தும் அதுவே கழுத்தளவு எழுதினா, அதை நாம காப்பாத்தணும். ----- மேனேஜர், ஃப்ரஷ்ஷரை ரொம்ப சோதிப்பான் ஆனா கைவிட மாட்டான். எக்ஸ்பிரியன்ஷுக்கு நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுடுவான். ----- அசந்தா அடிக்குறது கவர்மெண்ட் பாலிஸி அசராம அடிக்குறது சத்யம் பாலிஸி ----- டெவலப்பர் டீம் போடுறது, லாஜிக் கணக்கு டெஸ்ட்டர் டீம் போடுறது, டிஃபக்ட் கணக்கு மார்க்கட்டிங் டீம் போடுறது, ப்ராஜக்ட் கணக்கு மேனேஜ்மெண்ட் டீம் போடுறது, ரெவன்யூ கணக்கு ஹெ.ஆர். டீம் போடுறது, தலை கணக்கு சிஸ்.அட்மின் டீம் போடுறது, வலை கணக்கு சேல்ஸ் டீம் போடுறது, விற்பனை கணக்கு ரிசர்ச் டீம் போடுறது, கற்பனை ...

ஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ?

Image
ஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ? ( இது ஒரு கற்பனை, சிரிக்க மட்டும், சிரியஸ் அல்ல) ஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் எப்படி இருக்கும் என்று ஒரு சின்ன கற்பனை... முதலாளி : மாஸ்டர் ! நம்ம ஹோட்டலுக்கு கஸ்டமர்ஸ் அதிகமா வரதுக்கு ஐ.டி கம்பேனியில வேலை செஞ்சவங்கள கூப்பிட்டு வந்திருக்கேன். அவங்கள வச்சி வேலை வாங்குறது உங்க பொறுப்பு...! சரக்கு மாஸ்டர் : கவலைய விடுங்க... நம்ப ஹோட்டல் சேல்ஸ் எப்படி பிச்சிக்கிட்டு போகுது பாருங்க... முதலாளி : சரி ! நான் போய்ட்டு சாய்ங்காலம் வரேன்.. மாஸ்டர் ஒருவரிடன் சென்று.... மாஸ்டர் : ஐ.டி. கம்பேனியில என்னவா இருந்தீங்க... அவன் : நான் PM ஆ இருந்தேன்.. மாஸ்டர் : என்னது Prime Minister ராவா...???? அவன் : இல்லைங்க.... Project Manager ரா இருந்தேன். மாஸ்டர் : அப்படி முழுசா சொல்லு.... சூப்பர்வைசர் வேலை தானே.... PM : இல்லைங்க... வேலை செய்யுறதுக்கு எத்தன பேரு வேணும், எவ்வளவு நேரம் எடுக்கும்னு ப்ளான் போட்டு கொடுத்து... அவங்க வேலை செய்யுறத கவனிக்குற வேலைங்க.... மாஸ்டர் : அதுதான்.... சூப்பர்வைசர் வேலை... PM : நாங்க ப்ளான் போட்டு.... அதுக்கு தகுந்தா மாதிரி மத்தவங்கள வ...

தமிழ் கடி ஜோக்ஸ்

'அந்த மேஜை ரொம்ப வெட்க படுத்து .' 'ஏன்' 'அதுக்கு டிராயர் இல்லையே ' *************************************** பாமா : பல் ஆஸ்பத்திரிக்கு எப்படிப் போகணும். ராமு : சொத்தையோட போகணும் -------------------------------------------------------------------------------- உமா : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன் பாமா : எதை வைத்து? உமா : பேனாவை வைத்து தான் எழுதினேன்! -------------------------------------------------------------------------------- விஜய் : கொக்கு ஏன் ஒத்தக்கால்லே நிக்குது? அஜய் : இன்னொரு காலைத் தூக்கினால் கீழே விழுந்துடுமே அதுதான். ------------------------------------------------------------------------------- ரேணு : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை. பானு : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும். ரேணு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே! -------------------------------------------------------------------------------- கரண் : கழுதைக்குப் பிடித்த ரொட்டி எது? கிரண் : தெரியலியே? கரண் : சுவரொட்டி - தான். கிரண் : ????????? *********************** தத்துவம் 1: 50...

நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)

எனக்குத் தூக்கத்துல உளர்ற வியாதி இருக்குன்னு சர்டிபிகேட் தர முடியுமா டாக்டர்? எதுக்கு? என் மனைவியைத் திட்ட வேற வழியே தெரியலை டாக்டர்! *************************************** இவரு எங்க கட்சியில் சேர்ந்ததால்தான், கட்சிக்குப் பேரே வந்தது! என்ன பேர்? கெட்ட பேர்! *************************************** டாக்டர், என் கணவர் பாதி சமைக்கும்போது மயக்கம் போட்டு விழுந்துட்டாரு! இப்ப என்ன பண்றது? ஹோட்டல்ல சாப்பிட்டுக்குங்க! *************************************** உங்களுக்கு ஊசி போடனும்! ஸ்பெஷலா? சாதாவா? ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? ஸ்பெஷல்னா, ஊசி போட்ட இடத்துல நர்ஸ் தேய்ச்சுவிடுவாங்க! சாதான்னா, கம்பவுண்டர் தேய்ச்சுவிடுவாரு! *************************************** என் டேபிளுக்குச் சாப்பிட வந்தவன், படுகஞ்சனா இருப்பான் போலிருக்கு. எப்படிச் சொல்றே? தட்டில் அரை இட்லியை மீதி வைச்சுட்டு, டிப்சுக்குப் பதிலா வைச்சுக்கன்னு சொல்லிட்டுப் போறான். *************************************** ஏண்டா மச்சான் சோகமா இருக்க? இந்த பாழாப்போன ஞாபக மறதியால கஷ்டப்படறேன்! என்னடா ஆச்சு? என் பொண்டாட்டிய டைவர்ஸ் பண்ணினேனா, ஞாபக மற...

சிக்ஸ் பேக்- ஜே.கே.ரித்தீஸ், எஸ்.ஜே.சூர்யா, டி.ஆர்

Image
வாரணம் ஆயிரம்ல் சிக்ஸ் பேக் உடல் கட்டுடன் நடிச்ச சூர்யாவைப் பார்த்து ஜே.கே.ரித்தீஸ், எஸ்.ஜே.சூர்யா, டி.ஆர் என்று அனைவரும் மல்லு கட்டகிறார்கள் . என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம். ஜே.கே.ரித்தீஸ் அறையில்...ரித்தீஸிடம் அண்ணே நீங்க நாயகன் படத்தில் ஒருவன் முதுகில் ஊஞ்சலாடியதை கண்டு உலகமே மெரண்டு போய் கிடக்கு அண்ணே அதை அப்படியே மெயிண்டெயின் செய்யனும், ஈக்குச்சி போல உடம்பு இருக்கிறவனுங்க எல்லாம் சிக்ஸ் பேக்கோடு நடிச்சு மிரட்டுரானுங்க அதுபோல நீங்களும் சிக்ஸ் பேக்கோட நடிக்கனும்... ஜே.கே: நாம நடிக்கிறத பார்த்தே மிரண்டு போறானுங்க, இதுல எதுக்கு சிக்ஸ் பேக்! இப்படி சொன்னா எப்படின்னே அப்புறம் உங்க எதிர்கால அமெரிக்க முதல்வர் ஆகும் கனவு கலைஞ்சுடும் அண்ணே! ஜே.கே: சிக்ஸ் பேக்கும் என் அமெரிக்க முதல்வர் கனவுக்கும் என்ன சம்மந்தம்? அண்ணே அர்ணால்டு சிக்ஸ் பேக்கோடு நடிச்சதால் தான் அவரு அழகில் அனைவரும் மயங்கிட்டாங்க அதனால் தான் அமெரிக்காவில் இருக்கும் ஒரு நாட்டுக்கு பிரதமர் ஆகி இருக்கார், நீங்களும் அவரை போல் நடிச்சீங்க புஷ் போல நீங்களும் அடுத்த அமெரிக்க முதல்வர் ஆகிடுவீங்க. ஜே.கே: அப்படியா இருடே இதோ வருகிறே...

தழில் சினிமா வசனங்கள் ஒரு நகைச்சுவை

ரெட்: அஜித்: ரெட் எல்லாத்துக்கும் ஒரு டைம் கொடுப்பான்... மழ நிக்கறதுக்குள்ள மக்கள்: படத்தை தியேட்டரை விட்டு தூக்கணும் அஜித்: அது!!! ---------------------------------------------------------- அருணாச்சலம்: தலைவர்: ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கறான். செந்தில்: இப்படி சொல்லி சொல்லியே பிரசாதம் முழுசா நீயே தின்னுட்ட!!! ------------------------------------------------------------ ரன்: அதுல்குல்கர்னி: எங்க ஆத்தா போட்ட சோத்துல ரத்தமில்லையா? விஜயன்: போட்டது சாம்பார் சோறு... அதுல பில்டப்புக்கு ஒண்ணும் குறைச்சலில்ல... ------------------------------------------------------------- வல்லவன் சிம்பு: நீ அம்பானி பொண்ணை கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகனும்னு ஆசைப்படற... நாம் அம்பானியாவே ஆகனும்னு ஆசைப்படறேன் மக்கள்: இந்த கொடுமையெல்லாம் கேக்கக்கூடாதுனுதாண்டா அம்பானி செத்துப் போயிட்டாரு... -------------------------------------------------------------- தவசி பு.க: புயல் அடிச்சி பொழைச்சவன் இருக்கான் ஆனா இந்த பூபதி அடிச்சி பொழைச்சவன் இல்லடா இளவரசு: நீங்க அடிச்சு பொழைச்சவன் கூட இருக்காங்களாம்... ஆனா உங்க படம் தியே...

சிரிக்கலாம் வாங்க !

Image
துணை ஆசிரியர்...இவ்வார அட்டைபடம் வெகு ஜோர்னு நிறைய பேர் லெட்டர் போட்டிருக்காங்க. ஆச்சரியமா இருக்கு... பத்திரிகை ஆசிரியர்...- இதுல ஆச்சரியம் என் இருக்கு..? துணை ஆசிரியர்..- போன வாரம் நாம அட்டையில படமே போடல ஸார்..அது தான்...! *********************************** சாப்பிட வந்தவர்... - என்னய்யா சாம்பார்ல புதுசா பிளேடு ஒன்று கிடக்குது....? சர்வர்...- தாங்ஸ்! கொண்டாங்க ஸார். ஒரு வாரமா தொலைச்சிட்டு சேவிங் பண்ணாம தேடிட்டு இருக்கேன். *********************************** காதலன் ; கண்ணே நீ சொல்லப் போற அந்த மூணு வார்த்தை என்னை காத்தில மிதக்க வைக்கணும்.. ப்ளீஸ்.. சொல்லேன்.. காதலி ; போய் தூக்குல தொங்கு..! *********************************** என்னங்க.. உங்க புள்ளையும் உங்களைப் போலதான் இருக்கான்.. அவ்வளவு புத்திசாலியா..? இல்லே.. .. நிலாவைக் காட்டினா சோறு திங்க மாட்டுறான்.. எதிர் வீட்டு நீலாவைக் காட்டினா இளிச்சுகிட்டு திங்கிறான்..! *********************************** ஹலோ .. டாக்டர்.. ! காலையில 8 மணிக்கு என் மனைவி மூச்சு பேச்சு இல்லாம விழுந்துட்டா டாக்டர்.. அடப்பாவி.. ! இப்போ மதியம் 3 மணி ஆகுது.. இவ்வளவு நே...

வேலைக்கான நேர்காணலில்…உண்மையைச் சொல்ல முடிந்தால்..

Image
வேலைக்கான நேர்காணலில்…உண்மையைச் சொல்ல முடிந்தால்.. நீங்கள் ஏன் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புகிறீர்கள்..? எந்தப் புண்ணாக்குக் கம்பெனியிலாவது வேலை செஞ்சாதான் பொழப்ப ஓட்ட முடியும்..எந்த நாய் வேலை குடுக்குதோ அங்க வேலை செய்ய வேண்டியதுதான்.. அதைத் தவிர உன் கம்பேனி மேல பெருசா ஒண்ணும் மதிப்பு மரியாதையெல்லாம் இல்லே..! உங்களுக்கு ஏன் இந்த வேலையைத் தரவேண்டும்..? உன் கம்பெனி வேலையை யாராவது ஒருத்தன் செஞ்சுதானே ஆகணும்.. என்கிட்டதான் கொடுத்துப் பாரேன். உங்களுடைய தனித்திறமை என்ன..? வேலைக்கு சேர்ந்ததும், கடலை போட வழியிருக்கான்னு பார்ப்பேன்.. இங்கேருந்து என்னென்ன சுடலாம்ன்னு நோட்டம் உடுவேன்.. உன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்ததைச் சொல்லி ஊர் பூரா கடன் வாங்குவேன்..அப்புறம் வேற கம்பெனிக்கு தாவ முயற்சி பண்ணுவேன்.. இதைத் தவிர உன் கம்பெனிக்கு சேவை செஞ்சு முன்னுக்குக் கொண்டு வரணும்ங்கிற மூட நம்பிக்கையெல்லாம் கிடையாது. உங்கள் மிகப்பெரிய பலம்..? இதைவிட பெரிய சம்பளத்தில் வேலை கிடைச்சா அப்படியே உட்டுட்டு அங்கே ஓடிருவேன்.. மனசாட்சி, நன்றியுணர்வு இதுக்கெல்லாம் முட்டாள்தனமா,,இடமே கொடுக்காம கடுமையா நடந்துக்குவே...

காமெடி

நட’ ராஜா.. நீ ‘நட’ ராஜா டாக்டர், என்னோட ஓவர் வெயிட்டைக் குறைக்க நான் என்ன செய்யணும்? நீங்க ஒண்ணும் செய்யவேண்டியதில்ல… பெட்ரோல் ரேட்டை லிட்டருக்கு எழுபது ரூபாயா ஏத்திட்டாப் போதும். அந்தக் காலம்.. இந்தக் காலம் குடும்பத்தை மறந்தவர்கள், சாப்பாட்டை மறந்தவர்கள், ஏன் சிரிப்பைக் கூடத் தொலைத்தவர்கள், எந்நேரமும் நிலைகுத்திய பார்வையுடன் இருப்பவர்கள்.. யார்? சின்னக் குழந்தைக்குக் கூடத் தெரியுமே.. அது ரிஷிகள், முனிவர்கள் என்று. அது அந்தக் காலம். இந்தக்காலம்.. அது சாப்ட்வேர் எஞ்சினியர்கள்!! **** ஒரு குளத்துல 25 எறும்புகள் குளிச்சிக்கிட்டு இருந்துச்சாம். குளத்துல ‘டபக்’குன்னு ஒரு யானை குதிச்சதாம். குதிச்ச வேகத்துல 24 எறும்புகள் தெறிச்சு வெளியே வந்துடுச்சாம். ஒரு எறும்பு மட்டும் யானை தலைமேல ஏறிடுச்சாம். அப்போ 24 எறும்புகளும் கோரஸா கத்துச்சாம். என்ன கத்துச்சு? கடைசி ஜோக்குக்கு அப்புறம் பாருங்க.. *** மனம் திறந்த பாராட்டு! ஏங்க.. என்னுடைய சமையல் எப்படி இருக்கு? இப்படியே சமைச்சுப் போட்டா எனக்கு என்ன கிடைக்கும்? சீக்கிரம் உனக்கு என்னோட எல்.ஐ.சி. பணம் கிடைக்கும். *** ஆளாளுக்கு ஒரு பிரச்சினைனா..இவருக்கு இப்ப...

நகைச்சுவைத் துணுக்குகள்

ஓவிய கண்காட்சிக்கு சென்றிருந்த ஜோ பக்கத்திலிருந்தவரிடம், நபர் : “எப்படி பாத்தாலும் ஒண்ணும் புரியல. இது என்ன ஓவியம்?” ஓவியர் : “இது முகம் பார்க்கும் கண்ணாடி சார்” ************************************************ தபால்காரர் : “உனக்கு வந்திருக்கும் பார்சலை கொடுக்கறதுக்காக 5 கி.மீ வந்தேன் தெரியுமா?” நபர் : “அதுக்கு பார்சலை தபால்ல அனுப்பியிருக்கலாமே?” ************************************************ நண்பர் : “என்ன பண்ணிட்டிருக்க ஜோ?” நண்பர் 2: “எங்க அப்பாவுக்கு லெட்டர் எழுதிக்கிட்டு இருக்கேன்” நண்பர் : “அதுக்கு ஏன் இவ்வளவு மெதுவா எழுதற?” நண்பர் 2: “அவரால வேகமாக படிக்க முடியாது. அதனால்தான் மெதுவா எழுதறேன்” ************************************************

IT வீரனின் தினசரி song

என் இனிய தமிழ் மக்களே…. உங்களுக்கு ஒரு IT வீரனின் தினசரி போராட்டத்தை கவிதை நடையில் வர்ணித்துள்ளான் இந்த வாரதிராஜா… நீங்கள் கேட்க்கவிருப்பது ஒரு software சுப்பனின் கிராமத்து காவியம், இந்த படைபிற்க்காக சுட்டது: பருத்தி வீரன் பாடலை சுடாதது: ஆந்த பாடல் வரிகளை Start Music…… Team members: ஊரோரம் IT-பார்க்கு ஊலுப்பிவிட்டா சலசலக்கும் ஊரோரம் IT-பார்க்கு ஊலுப்பிவிட்டா சலசலக்கும் நான்பிறந்த சென்னையில ஆளுக்காளு programmera நான்பிறந்த சென்னையில ஆளுக்காளு programmera Team members: கூடுனுமே கூடுனுமே codeஅடிக்க மாடு போல கூடுனுமே கூடுனுமே codeஅடிக்க மாடு போல மாட்டுனமே மாட்டுனமே நார-PM கையிமேல மாட்டுனமே மாட்டுனமே நார-PM கையிமேல PM: நிறுத்துங்கடி, ஏ நிறுத்துங்கடி, நிறுத்துங்கிறேன்ல Codeஅடிங்கடின்னா என்னா நக்கலா ஏய் Fresher நீ இங்க வா, டேய் associate நீ இங்க வா, எல்லாம் வரிசையா நில்லு நல்லா keybordaa வளச்சு நெளிச்சு அடிக்கனும் என்ன Team member: யோவ் இங்க பாருய்யா keybordala கண்டவாக்குல கைவச்சின்னா உனக்கு delivery கிடையாது ஆமா PM: இங்க பார்யா கோவத்த, டேய் T L அட்ரா TL: நாடரிஜ்ச fresherகளா நீங்க எங்க...

சைட் அடிப்போம் சந்தோஷமா இருப்போம்

Meaning of Kathal K = கண்ணீர் A = அவஸ்தை D = டென்சன் H = Heart Pain A = அடி L = Loss Of Pain Meaning of SIGHT S-Simple I-Idle G-Good H-Humble T-Timepass அதனால ஜனங்களே, சைட் அடிப்போம் ஜாலியா இருப்போம்

KADI JOKES

Image

தமிழ் கார்டூன் ஜோக்ஸ்

Image