நகைச்சுவை உரையாடல்கள்… பார்த்திபனும்...வைகைப்புயல் வடிவேலுவும்









பார்த்திபன் ஒரு கடை வைத்திருக்கிறார்...அந்த பக்கம் வடிவேலு போண்டா மணியுடன் வருகிறார்...அவரைப் பார்த்த பார்த்திபன்..

பார்த்திபன் - (தனக்குள்) அடடா..இவன் வந்துட்டானா? கொஞ்சம் லொள்ளு பண்ணுவோம் (வடிவேலுவை பார்த்து) வாங்க...வாங்க...

வடிவேலு - என்னையா? அடடா..இதுவரை யாரும் என்னை வாங்கன்னு மரியாதையா கூப்பிட்டதில்லை...இவன் இரண்டு வாட்டி வேற கூப்பிடரானே!! (உள்ளே நுழைகிறார்)

பார்த்திபன்-வாங்க..என்ன வேணும்..

வடிவேலு- (அப்போதுதான் அவரை நன்கு பார்க்கிறார்) அடடே..மவனே..இவனா..(போண்டாவை அடிக்கிறார்) ஏண்டா? முன்னமே இவன் இருக்கான்னு சொல்லக்கூடாது.. (வெளியேற நினைக்க)

பார்- டேய்..உள்ள வந்துட்டு எதையாவது வாங்காம எப்படி போவே

வடி- அண்ணே..நீங்க தானே வாங்க..வாங்க..னு சொன்னீங்க..

பார்-உன்னை சொல்லலைடா..ஏதாச்சும் வாங்க வாங்கன்னேன்

வடி-அண்ணே..நல்லா பேசறீங்க..எனக்கு ஆனா எதுவும் வாணாங்க

பார்-இன்னிக்கு நீ எதுவம் வாங்கலே..மவனே துபாய்ல நீ என்ன பண்ணினேன்னு ஊர்ல சொல்லிடுவேன்..

வடி- வேணாம்னே..(அங்கு உள்ள புத்தகங்களை பார்வையிடுகிறார் இருப்பதிலேயே..சின்னதாக ஒன்றை எடுக்கிறார்) அண்ணே இது விலை என்ன..

பார்-10 ரூபாய்...உனக்குன்னா 20 ரூபா

வடி-கொஞ்சம் சொல்லிக் கொடுங்க..அண்ணே

பார்- இங்க புத்தகம் விக்கறதுமட்டும் தான்..சொல்லியெல்லாம் கொடுக்க முடியாது

வடி- அது இல்லை..அண்ணே..குறைச்சுக் கொடுங்க..

பார்- லொள்..லொள்..லொள்..இந்தா 20 ரூபா கொடு

வடி- ஏன்ணே....நாய் மாதிரி குரைக்கரீங்க

பார்-நீ தானே குரைச்சு கொடுக்க சொன்னே

வடி- அய்யய்யோ..தெரியாத்தனமா..இந்த ஆள்கிட்ட மாட்டிக்கினோமே..வாடா போண்டா போலாம்

பார்- டேய்..காசை கொடுத்துட்டு போ...ஆமாம் எங்க போற..

வடி-இந்த ஊர்ல தங்க வீடு கிடைக்குமாண்ணே

பார்-தங்கவீடா..குடிசை வீடு,ஓட்டு வீடு, கல்லு வீடுதான் ஊர்ல இருக்கு..தங்கவீடெல்லாம் கிடையாது..

வடி- அண்ணே..என்னை விட்டுடு..(ஓட்டம் எடுக்கிறார்)

Comments

Popular posts from this blog

செம மொக்கை ஜோக்குகள்

நகைச்சுவை கதைகள்…

தமிழ் கடி ஜோக்ஸ்