வெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி?
முதல்ல வெந்நீத் தண்ணின்னா என்னான்னு தெரியாதவகளுக்கு வென்னீர் = வெம்மை + நீர். அதாவது சுடுதண்ணிங்க! எங்க ஊரப்பக்கம் எப்பவுமே செந்தமிழிலயே பேசிப் பழகிட்டதுனால இந்தப் பிரச்சினை. சரி வெந்நீத் தண்ணி வைக்கிறதெல்லாம் ஒரு பெரிய விசயமா? இதுக்குப் போயி ஒரு பொல்லாத பதிவு எழுத வந்திட்டயேன்னு கேக்குறீகளா? முழுசாப் படிங்கப்பு... இந்த வெந்நீத் தண்ணிங்கறது இருக்கே, ஒரு பெரிய தில்லாலங்கடிங்க. நம்மூர்ல காச்சக் கடுப்பு வந்தாக் குடிக்க, கூதக் காலத்துல குளிக்க, தெருவுல அடிவாங்கிட்டு வந்தா ஒத்தடங் குடுக்க, ரொம்பக் கடுப்பு வந்தா எவன் மூஞ்சிலயாச்சும் ஊத்த அப்படின்னு வெந்நீத் தண்ணிக்கு இல்லாத உபயோகங் கெடையாது. அதிலயும் இந்தக் காச்சக்காரவுக இருக்காகளே, வெந்நீத் தண்ணி இல்லைன்னா அவுகளுக்கு நாளும் பொழுதுங் கெடையாது. எப்பவுமே கூதக் காலம் வந்தா எனக்குச் சளி பிடிக்கும். சளி பிடிக்கிறதும் சனி பிடிக்கிறதும் ஒண்ணும்பாக. இல்லைங்க! சனி எவ்வளவோ தேவலாம். அது எப்படிங்கறதே இன்னொரு தனிப்பதிவாப் போடணும். மதுரைச் சளி ஒரே ஒரு தடவை விக்ஸைப் போட்டுக் கரகரன்னு சூடு பறக்க நெஞ்சாம்பட்டையில தடவினாப் போயிரும். ஆனா இந்த ஹைதராபாத் சளி இரு...