விஜயகாந்த் கைது
தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் விஜயகாந்த், இன்று காலை அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். சற்று நாட்களாக அதிகம் படப்பிடிப்பு எதிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. கட்சியின் நிர்வாகிகளை மட்டுமே சந்தித்து பேசி வந்த அவர் அளவுக்கு அதிகமாக குண்டாகி விட்டதால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை ஆணையர் தெரிவித்தார். உடல் மெலிந்ததும் அவர் விடுதலை செய்யப்படலாம் என அதிகாரபூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் எந்தக் கடையில் அரிசி வாங்குகிறார் என்பது விசாரிக்கப்பட்டு வருகிறது. அரிசி கடத்தல், அரிசி விலை உயர்வு ஆகியவற்றுக்கும் விஜயகாந்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. விஜயகாந்த் கைது செய்யப்பட்டதை வில்லன் நடிகர்கள் பொன்னம்பலம், பெசன்ட் நகர் ரவி மற்றும் அனைத்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் வரவேற்றுள்ளனர்.