சிரிக்கலாம் வாங்க !
துணை ஆசிரியர்...இவ்வார அட்டைபடம் வெகு
ஜோர்னு நிறைய பேர் லெட்டர் போட்டிருக்காங்க.
ஆச்சரியமா இருக்கு...
பத்திரிகை ஆசிரியர்...- இதுல ஆச்சரியம் என் இருக்கு..?
துணை ஆசிரியர்..- போன வாரம் நாம அட்டையில
படமே போடல ஸார்..அது தான்...!
***********************************
சாப்பிட வந்தவர்... - என்னய்யா சாம்பார்ல புதுசா
பிளேடு ஒன்று கிடக்குது....?
சர்வர்...- தாங்ஸ்! கொண்டாங்க ஸார்.
ஒரு வாரமா தொலைச்சிட்டு சேவிங் பண்ணாம
தேடிட்டு இருக்கேன்.
***********************************
காதலன் ; கண்ணே நீ சொல்லப் போற அந்த மூணு வார்த்தை
என்னை காத்தில மிதக்க வைக்கணும்.. ப்ளீஸ்.. சொல்லேன்..
காதலி ; போய் தூக்குல தொங்கு..!
***********************************
என்னங்க.. உங்க புள்ளையும் உங்களைப் போலதான் இருக்கான்..
அவ்வளவு புத்திசாலியா..?
இல்லே.. .. நிலாவைக் காட்டினா சோறு திங்க மாட்டுறான்..
எதிர் வீட்டு நீலாவைக் காட்டினா இளிச்சுகிட்டு திங்கிறான்..!
***********************************
ஹலோ .. டாக்டர்.. ! காலையில 8 மணிக்கு என் மனைவி மூச்சு
பேச்சு இல்லாம விழுந்துட்டா டாக்டர்..
அடப்பாவி.. ! இப்போ மதியம் 3 மணி ஆகுது.. இவ்வளவு
நேரம் என்னய்யா பண்ணினே..?
சந்தோஷத்துல கையும் ஓடல.. காலும் ஓடல.. டாக்டர்..!
***********************************
ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?
சமையல் கட்டுல வேல செஞ்சிட்டு இருந்த என் பொண்டாட்டிய கேஸ் கம்பெனிகாரன்
சிலிண்டர்னு நெனச்சு தூக்கிட்டு போயிட்டான்
***********************************
Comments
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க..