காமெடி

நட’ ராஜா.. நீ ‘நட’ ராஜா

டாக்டர், என்னோட ஓவர் வெயிட்டைக் குறைக்க நான் என்ன செய்யணும்?

நீங்க ஒண்ணும் செய்யவேண்டியதில்ல… பெட்ரோல் ரேட்டை லிட்டருக்கு எழுபது ரூபாயா ஏத்திட்டாப் போதும்.

அந்தக் காலம்.. இந்தக் காலம்

குடும்பத்தை மறந்தவர்கள், சாப்பாட்டை மறந்தவர்கள், ஏன் சிரிப்பைக் கூடத் தொலைத்தவர்கள், எந்நேரமும் நிலைகுத்திய பார்வையுடன் இருப்பவர்கள்.. யார்?

சின்னக் குழந்தைக்குக் கூடத் தெரியுமே.. அது ரிஷிகள், முனிவர்கள் என்று.

அது அந்தக் காலம். இந்தக்காலம்.. அது சாப்ட்வேர் எஞ்சினியர்கள்!!

****

ஒரு குளத்துல 25 எறும்புகள் குளிச்சிக்கிட்டு இருந்துச்சாம். குளத்துல ‘டபக்’குன்னு ஒரு யானை குதிச்சதாம். குதிச்ச வேகத்துல 24 எறும்புகள் தெறிச்சு வெளியே வந்துடுச்சாம். ஒரு எறும்பு மட்டும் யானை தலைமேல ஏறிடுச்சாம். அப்போ 24 எறும்புகளும் கோரஸா கத்துச்சாம். என்ன கத்துச்சு?

கடைசி ஜோக்குக்கு அப்புறம் பாருங்க..
***

மனம் திறந்த பாராட்டு!

ஏங்க.. என்னுடைய சமையல் எப்படி இருக்கு? இப்படியே சமைச்சுப் போட்டா எனக்கு என்ன கிடைக்கும்?

சீக்கிரம் உனக்கு என்னோட எல்.ஐ.சி. பணம் கிடைக்கும்.
***

ஆளாளுக்கு ஒரு பிரச்சினைனா..இவருக்கு இப்படி!

ஒரு நாளாவது கரெக்டா 9 மணிக்கு ஆபிஸ் போலாம்னு பார்க்கிறேன்.. முடிய மாட்டேங்குதே!!

ஏன்.. என்ன பிரச்சினை?

எனக்கு இன்னும் வேலையே கிடைக்கலை. அதான் பிரச்சினை!!
***

ஜொள்ளு 50%; லொள்ளு 50%

உன்னைப் பார்த்து ஒரு அழகான பொண்ணு சிரிச்சா என்னடா அர்த்தம்?

தெரியலியே!

உனக்குப் பின்னாடி நான் நிற்கிறேன்னு அர்த்தம்.
***

முதல் ஜோக் தொடர்ச்சி….

“டேய் மாப்ளே, அவன அப்படியே தண்ணில போட்டு அமுக்கிப் பிடிடா மாப்ளே”

Comments

Popular posts from this blog

செம மொக்கை ஜோக்குகள்

நகைச்சுவை கதைகள்…

தமிழ் கடி ஜோக்ஸ்