நேர்முகத்தேர்வில் சர்தார்ஜி -ஜோக்ஸ்







நேர்முகத்தேர்வில் சர்தார்ஜி

சர்தார்ஜி ஒருவர் இரயில் நிலைய அதிகாரி பதவிக்கான இண்டர்வியூவில் கலந்து கொண்டார். இரண்டு இரயில்கள் அதிவேகமாக எதிரெதிரே ஒரே பிளாட்பாரத்தில் வருவதை அறிந்தால் நீங்கள் முதலில் என்ன செய்வீர்கள் என்று அதிகாரி கேட்க, அதற்கு சர்தார்ஜி இவ்வாறு பதில் சொன்னாராம், "நான் முதலில் திரு. பாண்டா சிங் அவர்களுக்குத் தகவல் தெரிவிப்பேன்".

யார் அந்த பாண்டா சிங் என்று அதிகாரி கேட்டார். சர்தார்ஜி சொன்னார், "பாண்டா சிங் என் தம்பி. அவன் இது வரை ஒரு இரயில் விபத்தைக் கூட நேரில் பார்த்ததேயில்லை."

***************************


ஒரு ஜோடி


ஒரு ஜோடி ஹோட்டலில் ரூமெடுக்க போயிருந்தார்கள்.ரூமெடுத்து விட்டு மனைவி சோர்வாக இருக்க தூங்க சொல்லி விட்டு கணவன் கீழே இருந்த பாருக்கு போய் விட்டான்.

அவள் படுத்து தூங்க சரியாக ஒரு நிமிடத்தில் அறைக்கு சற்று வெளியே ஒரு ரயில் மிக வேகமாக போனது.

சரி வெளியூரில் சகஜம் என்று திரும்ப தூங்க அதே போல ஒரு ரயில் போனது.உடனே மேனேஜரை பார்த்து இப்படி ரயில் போகிற சப்தத்தால் தூங்க முடியவில்லை என்று சொல்ல அவனும் அறைக்கு வந்து பார்த்தான்.

"இதோ இந்த பெட்டில் படுத்து பாருங்கள் தெரியும்" என்று சொல்ல அவனும் ரயிலுக்காக படுத்து காத்திருந்தான்.

அப்போது பார்த்து அவள் கணவன் வந்தான்,"இங்கென்ன செய்கிறாய்?"

"அது...நான் ரயிலுக்காக காத்திருக்கிறேன் என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்?"

Comments

  1. வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க..

    ReplyDelete

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க..

Popular posts from this blog

செம மொக்கை ஜோக்குகள்

நகைச்சுவை கதைகள்…

தமிழ் கடி ஜோக்ஸ்