சிக்ஸ் பேக்- ஜே.கே.ரித்தீஸ், எஸ்.ஜே.சூர்யா, டி.ஆர்
வாரணம் ஆயிரம்ல் சிக்ஸ் பேக் உடல் கட்டுடன் நடிச்ச சூர்யாவைப் பார்த்து ஜே.கே.ரித்தீஸ், எஸ்.ஜே.சூர்யா, டி.ஆர் என்று அனைவரும் மல்லு கட்டகிறார்கள் . என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.
ஜே.கே.ரித்தீஸ் அறையில்...ரித்தீஸிடம்
அண்ணே நீங்க நாயகன் படத்தில் ஒருவன் முதுகில் ஊஞ்சலாடியதை கண்டு உலகமே மெரண்டு போய் கிடக்கு அண்ணே அதை அப்படியே மெயிண்டெயின் செய்யனும், ஈக்குச்சி போல உடம்பு இருக்கிறவனுங்க எல்லாம் சிக்ஸ் பேக்கோடு நடிச்சு மிரட்டுரானுங்க அதுபோல நீங்களும்
சிக்ஸ் பேக்கோட நடிக்கனும்...
ஜே.கே: நாம நடிக்கிறத பார்த்தே மிரண்டு போறானுங்க, இதுல எதுக்கு சிக்ஸ் பேக்!
இப்படி சொன்னா எப்படின்னே அப்புறம் உங்க எதிர்கால அமெரிக்க முதல்வர் ஆகும் கனவு கலைஞ்சுடும் அண்ணே!
ஜே.கே: சிக்ஸ் பேக்கும் என் அமெரிக்க முதல்வர் கனவுக்கும் என்ன சம்மந்தம்?
அண்ணே அர்ணால்டு சிக்ஸ் பேக்கோடு நடிச்சதால் தான் அவரு அழகில் அனைவரும் மயங்கிட்டாங்க அதனால் தான் அமெரிக்காவில் இருக்கும் ஒரு நாட்டுக்கு பிரதமர் ஆகி இருக்கார், நீங்களும் அவரை போல் நடிச்சீங்க புஷ் போல நீங்களும் அடுத்த அமெரிக்க முதல்வர் ஆகிடுவீங்க.
ஜே.கே: அப்படியா இருடே இதோ வருகிறேன்,என்று வெளியே ஓடிப்போய்
திரும்ப வருகிறார்..
இதோ பாருடா சிக்ஸ் பேக்
1) இது ஸ்கூல் பேக்
2) இது டிராவல் பேக்
3) இது ஹேண்ட் பேக்
4) இது ஷோல்டர் பேக்
5) இது லெதர் பேக்
6) இந்தாடா கடைசியா கேரி பேக்
எடுத்து மாட்டுங்கடா என் மேலே. இப்ப வந்துச்சா சிக்ஸ் பேக் என் மேலே!!!
மனசுக்குள் (அண்ணே உங்களு சினிமான்னா என்னானு தெரியாதுன்னே நினைச்சேன் ஆனா சிக்ஸ் பேக்ன்னாலும் என்னன்னு தெரியாதா அவ்வ்வ்வ்)
ஜே.கே: ஏய் யாருடா அங்க இந்த ஸ்கூல் பேக் ஒரு ஸ்கூல் படிக்கும் பெண் கொடுத்துச்சு அதுக்கு வாங்கி கொடுங்கடா 1000 ஸ்கூல் பேக், டிராவல் பேக் கொடுத்தவனுக்கு வாங்கி கொடுங்கடா ஒரு பஸ்!இப்படி அடுத்த அடுத்த கட்டளைகளை போட்டுக்கிட்டு இருக்கார் ரித்தீஸ்
எஸ்.ஜே.சூர்யாவிடம் ஒரு தயாரிப்பாளர் நீங்க தான் என் அடுத்த படத்தில் ஹீரோ படம் பேரு புளு பிலிம்..
என்னங்க புளு பிலிம் என்று வெச்சா வரி சலுகை கிடைக்காது நீலப்படம் என்று வெச்சுடலாம்...
தயாரிப்பு: அதுவும் சரிதான் நீலப்படம் என்றே வெச்சுடலாம், ஆனா நீங்க இந்த படத்தில் சிக்ஸ் பேக்கோடு வரும் போல ஒரு "சீன்" வைக்கனும்...
எஸ்.ஜே: அதுக்கு என்னா ஒரு நாள் டைம் கொடுங்க உங்க எதிர்ப்பார்பை நிறைவேற்றுவது போல சிக்ஸ் பேக்கோடு வருகிறேன்...
மறுநாள் காலை சார் இதோ பாருங்க சிக்ஸ் பேக்கோடு வந்து இருக்கேன்...
இது நமீதா "பேக்"..
இது ஸ்ரேயா "பேக்"...
இது அசின் "பேக்"...
இது திரிஷா "பேக்"...
இது நயன் தாரா "பேக்"...
இது பிரியாமணி "பேக்"... என்று கிளேவில் செஞ்ச நடிகைகளின் "பேக்"கை காட்டுகிறார். கதைப்படி ஹீரோவுக்கு காலையில் ஒரு பேக் இருக்கும் மாலை ஒரு பேக் இருக்கும் இப்படி ஒன்னு ஒன்னா மாறும் என்று கதைய வெச்சு கலக்கிடலாம்...
ஆஹா நீ எப்பவும் இப்படிதானா!!! என்று ஓடுகிறார் தயாரிப்பு.
********************************************************
அடுத்து டி.ஆர். வீட்டில் சார் உங்க பையன புது படத்தில் புக் செய்ய வந்து இருக்கோம்...
டி.ஆர்: சரி முதலில் கதைய சொல்லுங்க, புடிச்சா கால் ஷீட் வாங்கி தருகிறேன்...
சார் கதைப்படி உங்க பையன் ஒரு பாடி பில்டர் அவரிடம் பாடிய பில்ட் பண்ண வரும் ஹீரோயினுக்கும் கசமுசா ஆகிடுது... இதுல முக்கியமே உங்க பையன் தனுஷ்க்கு இருந்தது போல் சிக்ஸ் பேக் வேண்டும்...
டி.ஆர்: சினிமாவுக்காக அவனுக்கு வந்தது
சிக்ஸ் பேக்..
சிம்பு சினிமாவிலேயே இருக்கு பேக்கு.
அவன் வளந்த பின் வந்தது சிக்ஸ் பேக்
இவன் பிறப்பிலேயே ஒரு பேக்கு.
எங்க வீட்டில் இருப்பது இரண்டு பேக்கு
இதை தெரியதவனை எல்லாம் போட்டு தாக்கு.
ஏ டன் டனக்கா ஏ டனக்குனக்கா!
சிக்ஸ் பேக் சூப்பருங்கோ.
ReplyDelete[இவ்வளவு நாள் இந்த வலைப்பூ என் கண்ணில் படாமல் போனது எப்படி!!!???????