இன்றைய மெகா ஜோக்:

சார், நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க?

கல்யாணத்துக்கு முன்னாடியா, பின்னாடியா?

கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லுங்களேன்.

கல்யாணத்துக்கு முன்னாடி, முருகர் தான் ரொம்ப புடிக்கும்.

அப்போ பின்னாடி.

அது ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேண்டாத தெய்வம் இல்லை.

*********************************************

குவார்ட்டர் கோவிந்தன் : டாக்டர், நான் போதைல தெரியாம ஒரு எலியை உசுரோட முழுங்கிட்டேன். என்னை காப்பாத்துங்க!

டாக்டர் : இந்தாங்க, இந்த எலிமருந்தை சாப்பிட்டுங்க. எலி செத்திடும். அப்புறம் ஈசியா வெளியில் எடுத்திடலாம்!

*********************************************

மாப்பிள்ளை கோடியில் புரள்றவருன்னு சொல்றீங்க, அப்புறம் ஏன் அவருக்குப் பொண்ணு கொடுக்க மாட்டேங்கறாங்க?

தண்ணி அடிச்சுட்டு, எப்பப்பாரு தெருக்கோடியில் புரள்றவனுக்கு யார் சார் பொண்ணு கொடுப்பாங்க?

*********************************************

அம்மா, நாங்க புதுசா ஒரு முதியோர் இல்லம் ஆரம்பிக்கப் போறோம். உங்களால் ஏதாவது தர முடியுமா?

தாராளமா, என்னோட மாமியாரையும் மாமனாரையும் தர்றேனே.

*********************************************

மனைவி: இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும் இல்ல உங்க அம்மா இருக்கணும்!

கணவன் : வேலக்காரிய மட்டும் விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் எங்கயாவது போயிடுங்க.

*********************************************

சோமு : அடடே, ராமுவா? ஆள் அடையாளமே தெரியலியே?

ராமு : அடையாளமே தெரியாதப்போ நான் ராமுன்னு எப்படி கண்டுபிடிச்சே?

*********************************************

ஆசிரியர்: 10 பேர் சேர்ந்து ஒரு கட்டிடத்தை 20 நாள்ல கட்டறாங்க. அதே கட்டிடத்தை 20 பேர் சேர்ந்து கட்டினா, எத்தனை நாள்ல கட்டுவாங்க?

மாணவன் : ஏற்கனவே கட்டின கட்டிடத்தை ஏன் சார் மறுபடியும் கட்டணும்?

*********************************************

வள்ளுவருக்கு வளையல், மோதிரம் நெக்லஸை விட தோடு, தொங்கட்டான்தான் ரொம்பப் பிடிக்கும். தெரியுமா?

எப்படி?

செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்னு சொல்றாரே!

*********************************************

Comments

Popular posts from this blog

செம மொக்கை ஜோக்குகள்

நகைச்சுவை கதைகள்…

தமிழ் கடி ஜோக்ஸ்