குழந்தைகளின் கலாட்டா ஜோக்ஸ்
குழந்தைகளுக்கு எதைச் சொன்னாலும் கொஞ்சம் யோசிச்சி சொல்லுங்கள்.
ஏன்னா?
ஏண்டா.. நம்ம அம்மா தானே அடிச்சாங்க அதுக்குப் போயி இப்படி அழுவுறே?”
போங்கப்பா.. உங்கள மாதிரியெல்லாம் என்னால அடிய தாங்கிக்க முடியாது.
**************************************************
பூனை எலியைக் கடித்துக் கொன்றது. இது என்ன காலம்னு சொல்லு.
கடி காலம் சார்.
**************************************************
ஆசிரியர் : ”மகா கவி பாரதி” தெரியுமா?
மாணவன் : தெரியும் ”மகா” ,”கவி” , ”பாரதி” மூன்று பேரும் சூப்பர் figure
**************************************************
என்னடா மார்க் ஷீட்டல 1 மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
விலை வாசி ஏறிப் போச்சுப்பா... எதையுமே வாங்க முடியல..
**************************************************
உங்க டீச்சர் ஒரு நாளைக்கு சுமாரா எத்தனை பாடம் நடத்துவார்?
எல்லா பாடத்தையுமே அவர் சுமாராத்தான் நடத்துவார்.
**************************************************
ஆசிரியர் : ஏன்டா உன் புத்தகங்களை எல்லாம் பக்கத்து டேபிள்ள வச்சிட்டு நீ வந்து இங்க உட்கார்ந்திருக்க?
மாணவன் :நீங்க தானே சார் பிரச்சினைகளை தள்ளி வைக்கணும்னு சொன்னீங்க?
**************************************************
பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பது சரிதான் போல..
என்னடா சொல்ற?
பின்ன என்னப்பா? நீங்க தப்புத் தப்பா ஹோம் ஒர்க் போட்டுத் தர்றீங்க. வாத்தியார் என்னல அடிக்கிறாரு.
**************************************************
உலகத்திலேயே மிகப்பெரிய ஆங்கில வார்த்தை எது தெரியுமா?
தெரியாது
Smiles
எப்படி?
முதல் எஸ்-சுக்கும் கடைசி எஸ்-சுக்கும் ஒரு மைல் தூரம் இருக்கு. அதான்.
**************************************************
ஆசிரியர் : கோபால், உன்னுடைய அப்பா என்ன வேலை செய்கிறார்?
மாணவன் : என் அம்மா சொல்லும் வேலையை.
**************************************************
ஏன் கிளாசுக்கு கலர் கலரா நூல் வாங்கின் வந்து வச்சிருக்க?
நீங்கதானே சார் சொன்னீங்க?
நான் எப்போ சொன்னேன்?
உங்க வீட்ல இருக்கிற நல்ல நூல்களை நாளைக்கு பள்ளிக்கு வரும்போது கொண்டு வாங்கன்னு.
**************************************************
எல்லா எக்ஸாம்லயும் காப்பி அடிச்சே பாஸ் பண்ணுவானே நம்ம கோபு இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்?
அவன் ஜெராக்ஸ் கடை வச்சிருக்கான்.
:-)))
ReplyDeletesuper jokes continue thaliva
ReplyDeleteமனம் பாரமாய் இருக்கும் பொழுது உங்கள் நகைச்சுவை படித்து அந்த மனசை லேசாக்கலாம். அருமை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteகருத்து தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்
ReplyDeleteஅனைவரும் சிரித்து மகிழ வேண்டும் என்பதே எனது ஆசை
ReplyDelete:-)))நல்லா இருக்கு.
ReplyDelete