வி.பி. 42 ஆம் ஆண்டு. அதாங்க, கி.பி. 2016. எல்லோரும் எதிர்ப்பார்த்தப்படி முதல்வராக விஜய். இது நடக்கும்ன்னு தெரிஞ்சு, பல கட்சிகளை கலைச்சிட்டாங்க. விஜய் முதல்வர் ஆனவுடன் ‘கௌரவ முதல்வர்’ என்றொரு புது பொறுப்பு உருவாக்கப்பட்டு அதில் எஸ்.ஏ.எஸ். நியமிக்கப்பட்டு உள்ளார். முதல் பிரஸ் மீட். “சார்... எதுக்கு இந்த புது பதவி? இதுக்கு சட்டசபையில் விவாதித்து, கவர்னர் ஒப்புதல் வாங்கி இருக்கீங்களா?” “தம்பி, நான் ஒரு முடிவு எடுத்துட்டேனா, என் பேச்ச நானே கேட்க மாட்டேன். இதுல, சட்டசபை உறுப்பினர்கள், கவர்னர் பேச்ச எங்க கேட்குறது?” “என்ன சார்... ஒரு முதல்வரா இருந்துக்கிட்டு, கொஞ்சம் கூட பொறுப்பில்லாம பேசுறீங்க?” எஸ்.ஏ. விடம் விஜய், “அப்பா, வந்திருக்க எல்லாரோட பேரையும், அட்ரஸையும் குறிச்சு வச்சிருக்கீங்களா?” அந்த நிருபர் மறைகிறார். இனி, அடுத்த நிருபர், “முதல்ல, எந்த கோப்புல கையெழுத்து போட போறீங்க?” “இந்தியாவோட கடன், பல ஆயிரம் கோடிகள். அத அடைக்க வழி செய்ய போறேன்.” “சார். தமிழக முதல்வரா, அத எப்படி நீங்க அடைப்பீங்க?” “ஓ! அப்படியா? சரி. தமிழகத்தோட கடனை அடைக்க வழி செய்வேன்.” “அது எப்படி?” “என்னோட முத மாச சம்பள பணத...