விஜய் பற்றிய இன்னொரு ஜோக்


நிருபர் / மிஸ்டர் விஜய் நீங்க உங்க ஒவ்வொறு படம் முடிஞ்ச மறுநாள்
காலையில என்ன செய்விங்க...


நடிகர் விஜய்/ நேரா சர்ச்சுக்கு போய் பாவ மன்னிப்பு கேட்பேன்.


***************************************************

நிருபர் / சமீபத்தில் நீங்கள் உங்களுக்கு உள்ளே அல்லது மனசுக்குள்
சிரிச்ச சம்பவம்னு எதை சொல்லுவிங்க...


நடிகர் விஜய்/ சத்தியம் தியேட்டர் வாசல்ல குருவி படத்தோடபேனர்ல
வெற்றிகரமான 175வது நாள் போட்டு இருந்தது .எனக்கே சிரிப்ப அடக்க
முடியலைன்னா பார்த்து கோங்கன்னா....

***************************************************

கவுண்டமணி: ச்சே.. போன எடுத்தா நச்சு நச்சுன்னுராங்கப்பா.. ஏதோ வில்லுன்னு விஜய் படமாம்.. அத விஜய் ரசிகங்களாலேயே பார்க்க முடியலையாம்.. என்ன பாக்க சொல்றாங்க.. அட இது பரவா இல்ல.. சோசியல் மேட்டர், பண்ணிக்கலாம்.. ஆனா விஜய் பாட்டுக்கெல்லாம் என்ன ஆட சொல்றாங்கப்பா.. நான் என்ன விஜய் மாதிரி ஆடுகாலியா இல்ல பரதேசியா? ஒரே குஷ்டமப்பா.. ச்சீ... கஷ்டமப்பா..

விஜய்: ங்கண்ணா.. போன் வயரு பிஞ்சு ஒரு வாரம் ஆகுதுங்கன்னா..
கவுண்டமணி: ஹே ஹே.. ஹெய்ஹெய்.. டே டப்சா தலையா.. இது செல்போன்டா.. உன்னயல்லாம் ஹீரோவா போட்டு படம் எடுக்குறான் பாரு அவன சொல்லணும்..

விஜய்: போங்கண்ணா.. உங்களுக்கு ஒரே குறும்பு.. கம்பெனி சீக்ரட் எல்லாம் வெளியில சொல்லிக்கிட்டு.. சரி சரி.. இப்போ நம்ம பாட்ட கேளுங்க..
"ஹே ராமா ராமா ராமன்கிட்ட வில்ல கேட்டேன்
பீமா பீமா பீமன்கிட்ட கதைய கேட்டேன்
முருகு முருகு முருகன்கிட்ட மயில கேட்டேன்..
ஈசன் ஈசன் ஈசன் கிட்ட மலைய கேட்டேன்"

கவுண்டமணி:நிறுத்துடா ஆப்பிரிக்கா வாயா.. இவ்வளவு கேட்டியே.. பிரபுதேவாகிட்ட கதை என்னன்னு கேட்டியா?

விஜய்:??!!!

Comments

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க..

Popular posts from this blog

செம மொக்கை ஜோக்குகள்

நகைச்சுவை கதைகள்…

தமிழ் கடி ஜோக்ஸ்