Thursday, October 15, 2009

தீபாவளி பரிசு உங்களுக்காக -
தீபாவளி பரிசு உங்களுக்காக - அனைவரும் வெரும் வாழ்த்துக்கள் மட்டுமே சொல்வார்கள் ஆனால் நான் தீபாவளிக்காக மெகா பரிசு உங்களுக்காக தரப்போகிறேன்


+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+


+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+

+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
இப்பொழுது திருப்த்தியா?

தீபாவளி என்றாலே சந்தோஷம்தான்..........

தீபாவளி என்றாலே சந்தோஷம்தான்..........
யாவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...
எல்லாரும் தீபாவளி ஜோர்ல இருக்காங்க... ... நானும்தான்...........................

நோயாளி: ஊசி குத்தினால் வலிக்காதுன்னு சொன்னீங்க இப்ப பயங்கரமா வலிக்குது டாக்டர்?
டாக்டர்: எனக்குத்தான் வலிக்காதுன்னு சொன்னேன்.

டாக்டர்: உங்களுக்கு நெஞ்சுவலி எப்படி இருக்கு?
ஸ்டெனோ: சுருக், சுருக்னு குத்துது டாக்டர்!

"உங்களுக்கு ஊசி போடனும்! ஸ்பெஷலா? சாதாவா?"

"ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?"

"ஸ்பெஷல்னா, ஊசி போட்ட இடத்துல நர்ஸ் தேய்ச்சுவிடுவாங்க!

சாதான்னா, கம்பவுண்டர் தேய்ச்சுவிடுவாரு!"

"என்னது ஆபரேஷன் செஞ்ச டாக்டர் மயக்கம் போட்டு விழுந்துட்டாரா?"

"ஆபரேஷன் சக்ஸஸ் ஆயிடுச்சாம்."


"எங்க டாக்டர் ஆபரேஷன் செஞ்சதுல இதுவரைக்கும் மூணு பேருதான் செத்திருக்காங்க."
"அவ்வளவு கெட்டிக்காரரா?"
"அவர் ஆபரேஷன் செஞ்சதே மூணு பேருக்குத்தான்."

"அந்த டாக்டர்கிட்ட போனா மூணு வேளையும் கஞ்சிதான் குடிக்கணும்."
"ஏன்?"
"அவரோட ஃபீசை செட்டில் பண்ணினதுக்கப்புறம் அதுதானே முடியும்."

எனக்கு பிடித்த துறை காவல் துறை.......ஆனால் அவர்களைப் பற்றி எத்தனை ஜோக்குகள்!!enjoy!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


"எதுக்காக அந்தத் திருடனை, இன்ஸ்பெக்டர் இந்த அடி அடிக்கிறார்?"
"திருட்டுத் தொழிலை விட்டுடப் போறதா சொன்னானாம்."

"இன்ஸ்பெக்டர் சார், பிளேடு பக்கிரி என் பர்ஸைப் பிடுங்கிட்டு ஓடறான் சார்!"
"பர்ஸ்ல எவ்வளவு பணம் வச்சிருந்தே?"
"எதுக்குக் கேட்கறீங்க?"
"அவன்கிட்டே மாமூலைக் கரெக்டா கணக்குப் பண்ணி வாங்க வேண்டாமா?"

"இந்த ஊர்ல திருடர்களே கிடையாதா?"
"இருந்தாங்க! இந்த ஊர் இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்பர் ஆகி, வேறே ஏரியாவுக்குப் போயிட்டதாலே, அவங்களும் அவர் ஏரியாவுக்கே போயிட்டாங்க."

"எங்க ஊர் போலீஸ், திருட்டுப் போன மறுநாளே திருடனைப் பிடிச்சுடுவாங்க."
"இதென்ன பிரமாதம், எங்க ஊர் போலீசுக்கு, திருட்டு போறதுக்கு முதல் நாளே தெரிஞ்சுடும்."

"கபாலி! உன்னைப் போலீஸ் தேடுது."
"நான் இந்த மாசம் ஒரு தப்பும் பண்ணலியே."
"அதான், ஏன் பண்ணலைன்னு தேடுது."

Tuesday, October 13, 2009

100வது பதிவு - சிரித்து மகிழுங்கள்

வணக்கம் நன்பர்களே , இது என்னுடைய 100ஆவது பதிவாகும்.

என்னுடன் தொடர்ந்து சிரிப்பவர்கள்


கதிர் - ஈரோடு

jai..

Stephen

Padh

மலர்

Anbu

லவ்டேல் மேடி

ஆகாய நதி

Shaggy

குசும்பன்

vasanth kumar

இரா.சிவக்குமரன்

கும்க்கி

நட்புடன் ஜமால்

வடகரை வேலன்

நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார்

மின்னுது மின்னல்

Chennai Tiger

tamilan raj

william mounsey

siddiq siddiq

sunrays

Nalla Thambi

nilaamathy

sakthi

Surya Kannan

magnus mansard

N.ADAM MOHIDEEN


அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

மற்றும் கருத்து தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்மனிதனுக்கு இயற்கை வழங்கியிருக்கும் சக்தி வாய்ந்த மருந்து சிரிப்பு என்று மருத்துவ விஞ்ஞானம் சொல்கின்றது.

சிரிப்பு என்பது பிறரைகேலி, கிண்டல் செய்வதால் வருவதல்ல. உங்கள் உள் மனதின் வெளிப்பாடே சிரிப்பாக வரவேண்டும்.

தற்போது சிரிப்பு என்பதே மறந்து போய்விட்டது. காலை முதல் இரவு வரை பரபரப்பான வாழ்க்கை முறை. இதில் மன அழுத்தம், மன உளைச்சல், பொருளாதார போராட்டம் என பல நெருக்கடிகள், தொந்தரவுகள். இதில் எங்கே நாம் சிரிப்பது என்று நினைக்கின்றனர். முதலில் போராட்டம் இல்லாத உயிர்களே இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொருவருடைய வாழ்விலும் நெருக்கடிகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.

இந்த நெருக்கடிகளின் தன்மை வேண்டுமானால் மாறலாம். அவற்றின் பாதிப்புகள் எல்லாம் ஒன்றுதான்.

இரவு படுக்கைக்கு செல்லும்முன் நினைத்துப் பாருங்கள். இன்று நாம் எத்தனை முறை சிரித்து உள்ளோம், எத்தனை முறை கோபப்பட்டுள்ளோம் என்று. இதில் சிரிப்பு என்னமோ சிக்கனமாகத்தான் இருக்கும்.

சிரித்து வாழவேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே என்ற பாடலின் வரியைப் போல் வாழ வேண்டும்.

நாம் ஒவ்வொரு முறை சிரிக்கும்போதும் நம் ஆயுளின் அளவு அதிகரிக்கின்றது என்றார் ஒரு அறிஞர்.

ஒரு மனிதன் சிரிக்கும்போது அவனுடைய உடலில் பல இரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன.

· உடலின் இரத்த ஓட்டம் சீராகும். இதனால் இருதயத் துடிப்பு சீராகும். இரத்த அழுத்த நோய்கள் உள்ளவர்களுக்கு சிரிப்பு ஒரு சிறந்த மருந்து.

· சிரிக்கும்போது நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள பிராண வாய்வு நன்கு உட்சென்று உடலுக்கு புத்துணர்வைத் தரும்.

· சிரிப்பதால் மன அழுத்தம், மன இறுக்கம், மன உளைச்சல் குறையும்.

· ஜீரண உறுப்புகள் சீராக செயல்பட்டு மலச்சிக்கல் தீரும்.

· சிந்தனை, செயல் அதிகரிக்க சிரிப்பே சிறந்தது.

· அதிக டென்ஷன் உள்ளவர்கள், வேலைப்பளு கொண்டவர்கள் சிறிது நேரம் நகைச்சுவை காட்சிகளைப் பார்ப்பது நல்லது. அப்போது நம்மை அறியாமலேயே சிரிப்பு தோன்றும். அப்போது டென்ஷன் குறைந்து உடலும் மனமும் புத்துணர்வு பெறும்.

· நாம் கோபப்படும் போது நமது உடல், மனம், மட்டுமல்லாமல் நம்மைச் சுற்றியுள்ளவர்களும், குடும்பத்தில் உள்ளவர்களும் பாதிக்கப்படுவார்கள்.

· கோபத்தைக் குறைத்து சிறிது புன்னகையுடன் நடந்துகொண்டால் சொர்க்கம் என்பது வேறெங்கும் இல்லை, நம்மைச்சுற்றிதான் என்பதை நம்மால் உணர முடியும்.

தற்போது நகைச்சுவை மன்றங்கள் அதிகரித்திருப்பது ஆரோக்கிய வாழ்விற்கு நல்லது. பிறர் மனது புண்படும்படி சிரிப்பதோ, நக்கலாக சிரிப்பதோ சிரிப்பல்ல. மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய, உள்மனதிலிருந்து வரும் சிரிப்பே மகத்தானது.

குழ‌ந்தைக‌ளி‌ன் கலா‌ட்டா - சில குழ‌ந்தைக‌ள் ‌செ‌ய்யு‌‌ம் காமெடி கலா‌ட்டா‌க்க‌ள் இவை

சில குழ‌ந்தைக‌ள் ‌செ‌ய்யு‌‌ம் காமெடி கலா‌ட்டா‌க்க‌ள் இவை

அம்மா உஜாலா பாட்டில் வேணும்மா?

எதுக்குடா?

நாளைக்கு ஸ்கூல்ல நீலம் தாண்டுற போட்டி இருக்கு. அதான உஜாலா பாட்டிலை போட்டு தாண்டிப் பாக்கணும்.


******************************


நான் பேசிக்கிட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு தூங்கினா எப்படிடா?

நீங்க தானே போன ‌கிளா‌சி‌ல் சொன்னீங்க? வாழ்க்கையில் ஜெ‌யி‌க்கணு‌ம்னா கனவு காண வேண்டும்னு.. அதான்.

*********************************


பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பது சரிதான் போல..

என்னடா பழமொ‌ழி எ‌ல்லா‌ம் சொல்ற?

பின்ன என்னப்பா? நீங்க தப்புத் தப்பா ஹோம் ஒர்க் போட்டுத் தர்றீங்க. வாத்தியார் என்னல அடிக்கிறாரு.

*********************************

ஏ‌‌ண்டா... அ‌ந்த ப‌ஸ் ‌ஸ்டா‌ண்‌ட் ‌நி‌க்‌கிற ப‌ஸ்ல ஏறாம ‌நீ பா‌ட்டு‌க்கு நட‌ந்து போற?

அ‌ந்த ப‌ஸ் ஓடுமா?

‌ம்‌ம் ந‌ல்லா ஓடுமே...

அதா‌ன் ஏறல.. எ‌ங்க அ‌ப்பா சொ‌ல்‌லி‌யிரு‌க்காரு.. ஓடுற ப‌ஸ்ல ஏறாத‌ன்னு,,

*********************************

(போனில் தன் தந்தையைப் போல். . )

சிறுவன் : என் பையனுக்கு உடம்பு சரியில்ல அதனால இன்னிக்கு ஸ்கூலுக்கு வரமாட்டான்.

ஹெட்மாஸ்டர் : ‌நீ‌ங்க யார் பேசறது?

சிறுவன் : நான்தான் என்னோட அப்பா பேசறேன்.

************************************

அப்பா : ப‌‌ரீ‌ட்சைல கேள்வி எ‌ல்லா‌ம் எப்படி இருந்தது?

மகள் : ரொம்ப ஈசி‌ப்பா

அப்பா : அப்றம் ஏன் வருத்தமா இருக்க

மகள் : கேள்வி எ‌ல்லா‌ம் ஈசிதா‌ன், ஆனா இந்த பதில்தான். .

*********************************

Monday, October 12, 2009

சிரிப்பதற்காக சில படங்கள் - சிரிங்க.. சிரிங்க...


Photobucket


சும்மா இருந்த சிக்கனை..............................


Photobucket


சரியான ஷாட்..................................

Photobucket

ரொம்ப வளர்ந்துடுச்சு........................................


Photobucket


இது கால்கார் விளையாட்டு.... (கால்பந்து அல்ல)


Photobucket


ஒரு கன்னத்தில் அறைந்தால் உன் கன்னமும் வீங்கும்...


Photobucket


லேடீஸ் ஃபர்ஸ்ட்... இல்லைன்னா இப்படித்தான்...


Photobucket

ஓ..பாமா...


Friday, October 2, 2009

தமிழ் காமெடி


பையன்: எனக்கு வேலை இல்லைனு தெரிஞ்சும் எப்படி நம்ம கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க..

பொண்ணு: பையன் என்ன பண்ணுறான்னு கேட்டாங்க, வயத்துல உதைக்குறானு சொன்னேன்... அதான்....


***********************************************


டி ஆர் வசனம்:

கருப்புக்கு opposite வெள்ள
நீ யாருக்கும் கொடுக்காத தொல்ல
சிம்பு தாண்டா என் புள்ள
ஸ் எம் ஸ் அனுப்பலன்னா, குப்பையில போடு உன் 'செல்'ல


**************************************

ஒரு சர்தார்ஜி பெங்களூருக்கு பஸ்சில் வந்து கொண்டு இருந்தார்.பெங்களூர் வந்தவுடன்,

சர்தார்: [சத்தமாக...] "Banglore Banglore Banglore Banglore"

கண்டக்டர்: பி சைலண்ட்.....

சர்தார்: "Anglore Anglore Anglore Anglore"


**************************************

காதல் என்பது
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'

'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
பரத்தும் சந்தியாவும் நடிச்ச படம்!

************************************

உப்பில்லைன்னா சாப்பாடு வேஸ்ட்
wheel இல்லைன்னா வண்டி வேஸ்ட்
காதல் இல்லைன்னா வாழ்க்கை வேஸ்ட்
தங்கச்சி இல்லைன்னா...
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
மனைவி வேஸ்ட்டோ வேஸ்ட்!!

சிரிக்க

Blog Widget by LinkWithin