டாக்டரை பார்க்க போறிங்களா?


டாக்டரை பார்க்க போறிங்களா? பார்த்துங்க இந்த மாதிரியும் நடக்கும்





என்ன டாக்டர் ஆப்ரேஷனுக்கு முன்னாடி பேஷண்ட் நெத்தியில கத்தியால ஒரு கோடு போடுறாரு...?

அது பிள்ளையார் சுழியாம்....


*************************************

கொடுத்த பணத்தை தரலைன்னா பல்லை புடுங்கிடுவேன்னு சொல்லிட்டு போறாறே யார் அவர்?

எங்க ஏரியா பல் டாக்டர்...!

*************************************

ஆஸ்பத்திரிக்கு என் மனைவியை கூட்டிட்டு போகும் போது வாசல்படியிலேயே பிரசவம் ஆயிடுச்சு

அப்ப டோர் டெலிவரின்னு சொல்லு...!


*************************************

டாக்டர் எனக்கு 3 மாதமா கடுமையான இருமல்?

அப்படியா? சும்மாவா இருந்தீங்க..

இல்ல டாக்டர் இருமிக்கிட்டே தான் இருந்தேன்.

*************************************


உடம்புக்கு ஆயிரம் வியாதி வரத்தான் செய்யும் அதுக்காக இப்படி பயந்தா எப்படி?

நான் பயப்படறது நோய்க்கு இல்ல டாக்டர், உங்களுக்கு தான்.

*************************************

நர்ஸ்! பேஷண்ட்டுக்கு சுகர் இருக்கா?
இல்ல சார்.

பீ.பி இருக்கா

இல்லை சார்.

அட, ஆச்சர்யமா இருக்கே!

பேஷண்ட் செத்து அரை மணி ஆச்சு சார்!


*************************************

நோயாளி - 10 வருடமா எனக்கு ஞாபகமறதி இருக்கு டாக்டர்
டாக்டர் - ஏன் இவ்வளவு நாட்களாக தாமதாமக வருகிறீர்கள்.

நோயாளி - மறந்து போச்சு டாக்டர்.


*************************************

ஹலோ டாக்டர் என் மாமியார் பிழைச்சிடுவாங்களா?
உங்க மாமியார் பிழைச்சிட்டாங்க. இன்னும் ஒரு நிமிஷம் லேட்டா வந்திருந்தா. உயிரோட பார்க்க முடியாது.

பாழாப் போன ஆட்டோக்காரன் சீக்கிரமா வந்து தொலைச்சிட்டான். ச்சே...!

Comments

Popular posts from this blog

செம மொக்கை ஜோக்குகள்

நகைச்சுவை கதைகள்…

தமிழ் கடி ஜோக்ஸ்