மீண்டும் சிரிப்பு

"டாக்டர், எங்கப்பாவுக்கு இன்னும் பத்து நாள் கழிச்சி ஆபரேஷன் பண்ணுங்க...''
"ஏன்''
"சொத்துக்களை என் பேருக்கு இன்னும் மாத்தி எழுதல...''
*************
உமா: ஆபீசுக்கு போகும்போது உன் கணவர் `குட்நைட்'ன்னு சொல்லிட்டுப் போறாரே?...எதுக்கு?
ரமா: அங்க போய் தூங்கத்தானே போறார்.
*************
பெரியவர்: படிக்கட்டில் தொங்கும் தம்பிகளா, உள்ளே வாங்கப்பா...
மாணவர்கள்: ஏன் பெருசு?...
பெரியவர்: பஸ்சுக்குள்ளே நாம ஏறினாலும் நம்ம மேல பஸ் ஏறினாலும் `டிக்கட்' வாங்கப் போறதென்னவோ நாமதானே?...
*************
மதுமதி: என் மாமியார் முன்னே மட்டும் என் புருஷனை அடிக்க மாட்டேன்
சுமதி: ஏன்?..
மதுமதி: என்னால ஒரே நேரத்துல ரெண்டு பேர அடிக்க முடியாது.
*************
"அவர் சாமி...உங்க சிஷ்யனை ஏன் துரத்திட்டீங்க?...''
"சாமியார் பெண் பக்தர்களை வசியப்படுத்துவதில் என்னையே மிஞ்சிட்டான். அதான்''.
*************
(செல்போன் கடையில்... கடைக்காரர் கிராமவாசியிடம்)
ரீசார்ஜ் பண்ணாமலே `லைப்' பூராவும் பேசலாம்னுதான் சொன்னோம். பேட்டரி சார்ஜ் பண்ணாமலே செல் பேசணுமன்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்..
*************
நண்பர்-1: என் பையனுக்கு `செக்காலை' அதிபர் பொண்ணை கட்டி வச்சது தப்பாப் போச்சு!
நண்பர்-2: ஏன்,என்னாச்சு?
நண்பர்-1: எந்த நேரமும் அவளையே `சுத்திச் சுத்தி' வர்றான்.
Comments
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க..