குண்டாகலாம் வாங்க

நீங்க எப்பவும் அழகா "சத்தம் போடாதே" ஹீரோ ப்ரிதிவி ராஜ் மாதிரி இருக்கனுமா...?? தினமும்... நிறைய ஃப்ரஸ் பழங்கள் சாப்பிடுங்க..!!
அப்புறம்... பாருங்க.....!! உங்க உடம்பே ... 10 வயசு குறைஞ்ச மாதிரி சும்மா சூப்பரா யங்கா இருப்பீங்க...!



அடுத்தவங்களுக்கு 'ஐஸ்' வச்சே பழக்கப்பட்ட நீங்க, அடிக்கடி உங்களுக்குன்னும் 'ஐஸ்' சொந்த செலவில் வாங்கி சாப்பிடுங்கன்னு சொல்ல வந்தேன். எம்புட்டு பாசம் பூவுக்குன்னு நீங்க கண்ணு கலங்கறது தெரியுது.... ஆங்..................... இந்த 'ஐஸ்' எல்லாம் என்கிட்ட பலிக்காது. நீங்க உங்க காசுல தான் 'ஐஸ்' வாங்கி சாப்பிடனும்.. அப்போ தான் எடை கூடும்... இல்லாட்டி... உங்க எலும்பு எண்ணிக்கை டபுளா ஆகும்... அது என் ஆட்டோ ராசாக்களின் கைப்பக்குவம்....!!


பழைய சூன்யகாரி கதையெல்லாம் கண்ண முழிச்சி படிச்சிட்டு.... பரங்கிக்கா கண்ண முழிச்சி பேசுற மாதிரியும்... சிரிக்கிற மாதிரியும் கனவு கண்டுட்டு... வீட்டில வாங்கி வச்சிருக்கிற பரங்கிக்காயை செதுக்கி கண்ணு வாயி மூக்குன்னு வரைஞ்சி பரங்கிக்காயை நம்ப 'கொண்டாட்டம்' புகழ் S. ராஜா அண்ணாவின் முகம் மாதிரி ஆக்கி வச்சிட்டு.... 'ஏன் பரங்கிக்காய் பேச மாட்டீங்குதுன்னு??' மலங்க மலங்க விழிக்காம..... பரங்கிக்காயை நறுக்கி... கூட்டு செஞ்சு சாப்பிட்டா...... ஆஹா.. இனிக்க இனிக்க நீங்களும் இனிப்பா குண்டாகிடுவீங்க...!!


வீட்டில உங்க ஆத்துக்காரிகிட்ட சப்பாத்தி கட்டையால அடிவாங்கிட்டே அழுத்திட்டு.... சமயம் பார்த்து அடிக்கு பயந்து சப்பாத்திக்கட்டையை ஒளிச்சி வச்சிருப்பீங்க...!! அப்பனா... அதை முதல்ல வெளியே எடுத்து வாரத்துக்கு 4 நாளு சப்பாத்தி தேச்சி.... (அட உங்க கையால தாங்க) 10 சப்பாத்தி அசராம சாப்பிட்டுட்டு வந்தீங்கன்னா... அப்புறம்...நீங்க சப்பாத்திக் கட்டைய பார்த்து பயப்படவேண்டியதில்ல... அந்த சப்பாத்தி கட்ட உங்க உடம்ப பார்த்து ஓடி ஒளிஞ்சிக்கும்...!!


குச்சில சொருகி.... கோழியை ஃப்ரை பண்ணுவாங்களே... கடையில... அது மாதிரி... நீங்களும் வெண்ணை, சீஸ் பன்னு எல்லாம் வச்சி... ப்ரை பண்ணி நல்லா காலையில ஒரு வெட்டு வெட்டனும்... (அட... நல்லா சாப்பிடுங்கன்னு சொன்னேங்க...) பக்கதுல சாப்பிட்டுட்டு இருக்குறவர வெட்டிப்புடாதீங்க..... அப்புறம்... பாருங்க.... சும்மா,..... புட்டு புட்டுன்னு ஆகிடுவீங்க...!


'பூண்டு' சாப்பிட்டா நூறு வருசம் உயிரோட வாழலாம்" என்பது எல்லா மருத்துவர்களும் ஒப்புகிட்டது(அப்படின்னு நினைக்கிறேனுங்க... சண்டைக்கு கீது வந்துறாதீங்க...!!). 'மொழி' படத்துல ப்ரகாஷ் ராஜ் சொன்ன மாதிரி... "வாழ்க்கையில் சில விசயங்களை வெள்ளப்பூண்டால கூட காப்பாத முடியாது" அப்படிங்கறதும்(பூவு முதல்ல உன்னை காப்பாத்திக்கோன்னு நீங்க சொல்றது கேக்குது..!! ) உண்மை தான். அதனால.... ரொம்ப செண்டிமெண்டா... ஃபீல் பண்ணாம நிறைய பூண்டு உணவுல சேர்த்துக்கோங்க... உங்க ரொம்ப ஆரோக்கியமா இருக்கும்.. அப்புறம்... பாருங்க.... 'ஆர்னால்ட்' எல்லாம் அந்த பக்கம் நிக்கனும்.. உங்க முன்னாடி...!!


பீஸா மேல இருக்கிற நட்ஸ்-ஐ(அதாங்க... பாதாம் பாதிரி கொட்டைகள்..) மட்டும் பொருக்கி எடுத்து சாப்பிட்டுட்டு பீஸாவ அப்படியே வைக்காம... பீஸாவ முழுசா நல்லா சாப்பிடுங்க... பீப்பா மாதிரி ஆகாட்டியும்... அழகா புஃவ்னு ஆயிடுவீங்க...!


காலையில எழுந்து வேக வேகமா கிளம்பி ஆபிஸ் போகனுமா... இருக்கவே இருக்கு நூடில்ஸ் னு எடுத்து 2 நிமிடத்துல உங்களுக்கு நீங்களே ஆப்பு வச்சிக்காதீங்க... !! நூடில்ஸ் அடிக்கடி சாப்பிடுவது நல்லதில்லன்னு பெரிய விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சி சொல்லியிருக்காங்கங்க... (இப்படித்தான் சொல்லி உங்ககிட்டயிருந்து தப்பிக்க முடியும்.. நான் சொன்னதா சொன்னா கேட்கவா போறீங்க??)
அதனால கண்டிப்பா... வெறும் வயிற்றில் முளைக்க வச்ச தானியங்கள சாப்பிடுங்க..(பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை இப்படி..) அப்புறம்... நூடில்ஸ் சாப்பிடுவதை கூடுமானவரை அவாய்ட் பண்ணுங்க...!!
இப்போ.. உங்க உடம்பு மட்டுமில்லீங்க... இதயமும் பலமாகிடும்... சும்மா... சூப்பராயிடுவீங்க..!

Comments

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க..

Popular posts from this blog

நகைச்சுவை கதைகள்…

செம மொக்கை ஜோக்குகள்

தத்துவம் மச்சி தத்துவம்