வாங்க சிரிக்கலாம்,சிரிக்கலாம்






சில மனிதர்கள் முகத்தில் சிரிப்பைக் காணமுடிவதில்லையே, அது என்ன குணம்? அவர்களை என்ன வென்று சொல்வது? அவர்களை எப்பிரிவில் சேர்ப்பது?

இந்த கேள்விகளுக்கு ஒரே வரியில் பதில் சொல்ல வேண்டுமென்றால்
, 'மனிதன் சிரிக்கப்பிறந்தவன், ஆனால், சிரிக்க மறந்தவன்' என்றுதான் சொல்லவேண்டும்.

குழந்தை பிறந்த சில தினங்களிலேயே தன் பொக்கை வாயைத்திறந்து புன்னகைக்கத் துவங்கிவிடுகிறது
. பிறந்த 20வது வாரத்தில் சிரிக்க ஆரம்பித்துவிடுகிறது. 6வது மாதத்தில் சத்தம்போட்டுச் சிரிக்கத் துவங்குகிறது. கண்பார்வை அற்ற குழந்தைகூட புன்னகைக்கிறது. எனவே, குழந்தைகள் புன்னகைப்பது, சிரிப்பது என்ற உணர்ச்சிகள், அதன் தாயைப் பார்த்துக் கற்றுக்கொள்வது அல்ல என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

சின்னக் குழந்தைகள் ஒரு நாளில்
200 லிருந்து 400 முறை சிரிக்கிறார்கள். ஆனால், பெரியவர்களோ 20 முறைதான் சிரிக்கிறார்கள் என்று ஒரு நூலில் காணப்படுகிறது. இதைப் பார்க்கும்போது, ஒரு நாளில் 200 லிருந்து 400 முறை சிரித்துக்கொண்டிருந்த நாம், 20 முறை மட்டுமே நம் சிரிப்பைக் குறைத்துக்கொண்டதே நமது அநேக சிக்கல்களுக்குக் காரணம்.

"
மனவியல்" என்ற ஒன்று வளர்வதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, தமிழ் மூதாதையர்கள் சிரிப்பின் அவசியத்தை நன்கு உணார்ந்திருக்கிறார்கள். ஆகவேதான், "வாய்விட்டுச் சிரித்தால். நோய்விட்டுப் போகும்" என்ற அறிவுரையை நமக்குப் பழமொழியாகத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

"
சிரித்து வாழவேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!" என்று நமது தமிழ்க் கவிஞர் நமக்கு அறிவுறுத்தியுள்ளதை நினைவுகூருங்கள்.

மகாத்மா காந்தி ஒருமுறை கூறினார்
: " நகைச்சுவை உணர்வு எனக்கு இல்லாதிருந்தால், நான் நீண்ட நாட்களுக்கு முன்பே தற்கொலை செய்துகொண்டிருப்பேன்" ஆகவே, பழுத்த ஆன்மீகவாதியான அவரே இப்படிச் சொல்லியீருக்கிறார் என்றால், இந்த நகைச்சுவை உணர்வு என்பது, குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும், வயதானவர்களுக்கும், இல்லறத்தார்க்கும், துறவறம் பூண்டவர்களுக்கும் எல்லா நிலையிலும் அவசியமாகிறது என்பதை உணரமுடிகிறது.

சிரிக்கும்போது
"என்டோர்பின்ஸ்' என்னும் திரவப்பொருள் நம் மூளையில் உருவாகி ஒருவகையான இயற்கைப் போதையை ஊட்டுகிறது. இதனால் நம் உடலுக்குப் புத்துணர்ச்சி ஏற்படுகிறது.ஆனால், நாம் கவலையோடிருக்கும்போது, மனவழுத்தம், சோர்வு இவைதான் ஏற்படுகிறது. மனவழுத்தமானது, பதட்டம், விரக்தி போன்ற உணர்ச்சிச் சிக்கல்களை உருவாக்கிவிடுகிறது.

நாம் மனம்விட்டுக் குலுங்கக் குலுங்கச் சிரித்தால்
, மனத்திலிருக்கும் கவலைகளும், அழுத்தம், பதட்டம், விரக்தி இவைகளும் விரட்டியடிக்கப்பட்டு மனம் இலேசாகி, உட்லெங்கும் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. மனம் விட்டுச் சிரித்து. மகிழ்ச்சியோடு இருக்கும்போது, நம்க்கு ஆற்றல் அதிகமாகி, நாம் செயல்படுத்தும் அனைத்து வேலைகளுமே சிறப்பாக நடந்தேறுகின்றன.

(
தொடர்ந்து சிரிப்போம்...)

Comments

  1. நல்லாதான் இருக்கு

    ReplyDelete
  2. நல்லாதான் இருக்கு

    ReplyDelete
  3. சிரிக்கும் போது ஏற்படும் விளைவுகளை நன்றாக கூறி உள்ளீர்கள் நன்றி

    ReplyDelete

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க..

Popular posts from this blog

நகைச்சுவை கதைகள்…

செம மொக்கை ஜோக்குகள்

தத்துவம் மச்சி தத்துவம்