முடியல .....முடியல ......
அந்த கோயில் மண்டபத்துல இரவில் யாரும் தங்குவது இல்லையாமே...ஏன்?
அங்குள்ள கோயில் யானைக்கு தூக்கத்துல நடக்குற வியாதியாம்

***
டாக்டர்:ஏனப்பா...நாந்தான் உனக்கு ஆப்பிரேஷன் பண்ணனும்மின்னு ஒத்தக் கால்ல நிக்கிற?
நோயாளி:எனக்கு வாழ்க்கையே வெறுத்துப்போச்சி டாக்டர்...சாகலாம்னு நினைக்கிறேன்...
தற்கொலை பண்ணுறது கோழைத்தனம்னு தெரியும்...வேற வழியில்ல்லாமத்தான் உங்களைத்
தேடி வந்தேன்

***
''ஏண்டா,தலையெல்லாம் காயமாயிருக்கு?''
'கொட்டற மழையில்நடந்து வந்தேன்.'

****
''டாக்டர்,என் கனவில் எலிகள் கால் பந்து விளையாடுகின்றன.''
'அப்படியானால் இன்று இரவிலிருந்து நான் கொடுக்கும் மருந்தை சாப்பிடுங்கள்.'
''நாளையிலிருந்து ஆரம்பிக்கட்டுமா,டாக்டர்?'
'இன்றைக்கு ஏன் வேண்டாம்?'
''இன்று தான் இறுதி மேட்ச்.''

****
ஆண்கள் நிரம்பிய கூட்டத்தில் பேச்சாளர் கேட்டார்,''இங்கு தன மனைவியுடன் சொர்க்கம் போக விரும்புபவர்கள் கை தூக்குங்கள்.''
ஒருவனைத் தவிர அனைவரும் கை தூக்கினர்.பேச்சாளர் கேட்டார்,''ஏனய்யா,உனக்கு மட்டும் மனைவியுடன் சொர்க்கம் போக ஆசையில்லையா?''
'என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால் போதும்'
''ஏன்அப்படிச் சொல்கிறீர்கள்?''
'என் மனைவி சொர்க்கம் போய் விட்டால்,பூலோகமே எனக்கு சொர்க்கம் போல் தான் இருக்கும்.'
ஹா ஹா ஹா
ReplyDelete//'என் மனைவி சொர்க்கம் போய் விட்டால்,பூலோகமே எனக்கு சொர்க்கம் போல் தான் இருக்கும்.'
ReplyDelete//
repeataaaai
கருத்துக்கு நன்றிகள்
ReplyDelete