Tuesday, October 13, 2009

100வது பதிவு - சிரித்து மகிழுங்கள்

வணக்கம் நன்பர்களே , இது என்னுடைய 100ஆவது பதிவாகும்.

என்னுடன் தொடர்ந்து சிரிப்பவர்கள்


கதிர் - ஈரோடு

jai..

Stephen

Padh

மலர்

Anbu

லவ்டேல் மேடி

ஆகாய நதி

Shaggy

குசும்பன்

vasanth kumar

இரா.சிவக்குமரன்

கும்க்கி

நட்புடன் ஜமால்

வடகரை வேலன்

நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார்

மின்னுது மின்னல்

Chennai Tiger

tamilan raj

william mounsey

siddiq siddiq

sunrays

Nalla Thambi

nilaamathy

sakthi

Surya Kannan

magnus mansard

N.ADAM MOHIDEEN


அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

மற்றும் கருத்து தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்மனிதனுக்கு இயற்கை வழங்கியிருக்கும் சக்தி வாய்ந்த மருந்து சிரிப்பு என்று மருத்துவ விஞ்ஞானம் சொல்கின்றது.

சிரிப்பு என்பது பிறரைகேலி, கிண்டல் செய்வதால் வருவதல்ல. உங்கள் உள் மனதின் வெளிப்பாடே சிரிப்பாக வரவேண்டும்.

தற்போது சிரிப்பு என்பதே மறந்து போய்விட்டது. காலை முதல் இரவு வரை பரபரப்பான வாழ்க்கை முறை. இதில் மன அழுத்தம், மன உளைச்சல், பொருளாதார போராட்டம் என பல நெருக்கடிகள், தொந்தரவுகள். இதில் எங்கே நாம் சிரிப்பது என்று நினைக்கின்றனர். முதலில் போராட்டம் இல்லாத உயிர்களே இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொருவருடைய வாழ்விலும் நெருக்கடிகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.

இந்த நெருக்கடிகளின் தன்மை வேண்டுமானால் மாறலாம். அவற்றின் பாதிப்புகள் எல்லாம் ஒன்றுதான்.

இரவு படுக்கைக்கு செல்லும்முன் நினைத்துப் பாருங்கள். இன்று நாம் எத்தனை முறை சிரித்து உள்ளோம், எத்தனை முறை கோபப்பட்டுள்ளோம் என்று. இதில் சிரிப்பு என்னமோ சிக்கனமாகத்தான் இருக்கும்.

சிரித்து வாழவேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே என்ற பாடலின் வரியைப் போல் வாழ வேண்டும்.

நாம் ஒவ்வொரு முறை சிரிக்கும்போதும் நம் ஆயுளின் அளவு அதிகரிக்கின்றது என்றார் ஒரு அறிஞர்.

ஒரு மனிதன் சிரிக்கும்போது அவனுடைய உடலில் பல இரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன.

· உடலின் இரத்த ஓட்டம் சீராகும். இதனால் இருதயத் துடிப்பு சீராகும். இரத்த அழுத்த நோய்கள் உள்ளவர்களுக்கு சிரிப்பு ஒரு சிறந்த மருந்து.

· சிரிக்கும்போது நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள பிராண வாய்வு நன்கு உட்சென்று உடலுக்கு புத்துணர்வைத் தரும்.

· சிரிப்பதால் மன அழுத்தம், மன இறுக்கம், மன உளைச்சல் குறையும்.

· ஜீரண உறுப்புகள் சீராக செயல்பட்டு மலச்சிக்கல் தீரும்.

· சிந்தனை, செயல் அதிகரிக்க சிரிப்பே சிறந்தது.

· அதிக டென்ஷன் உள்ளவர்கள், வேலைப்பளு கொண்டவர்கள் சிறிது நேரம் நகைச்சுவை காட்சிகளைப் பார்ப்பது நல்லது. அப்போது நம்மை அறியாமலேயே சிரிப்பு தோன்றும். அப்போது டென்ஷன் குறைந்து உடலும் மனமும் புத்துணர்வு பெறும்.

· நாம் கோபப்படும் போது நமது உடல், மனம், மட்டுமல்லாமல் நம்மைச் சுற்றியுள்ளவர்களும், குடும்பத்தில் உள்ளவர்களும் பாதிக்கப்படுவார்கள்.

· கோபத்தைக் குறைத்து சிறிது புன்னகையுடன் நடந்துகொண்டால் சொர்க்கம் என்பது வேறெங்கும் இல்லை, நம்மைச்சுற்றிதான் என்பதை நம்மால் உணர முடியும்.

தற்போது நகைச்சுவை மன்றங்கள் அதிகரித்திருப்பது ஆரோக்கிய வாழ்விற்கு நல்லது. பிறர் மனது புண்படும்படி சிரிப்பதோ, நக்கலாக சிரிப்பதோ சிரிப்பல்ல. மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய, உள்மனதிலிருந்து வரும் சிரிப்பே மகத்தானது.

6 comments:

 1. வாழ்த்துகள்

  தொடர்ந்து சிரிப்போம்

  ReplyDelete
 2. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் தல!

  ReplyDelete
 3. நல்ல காரியம் - வாழ்த்துகள் ...

  ReplyDelete
 4. மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழர்.
  தொடர்ந்து வாசிக்கிறோம்..ஆனால் பின்னூட்டம் போட எனக்கு மட்டும் தோன்றவில்லை.
  இனி தொடருகின்றேன்.
  உங்களின் பட்டியலில் இடம் பெற்றமைக்கு நாங்கள்தான் நன்றி சொல்ல வேண்டும்.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 5. கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி

  ReplyDelete
 6. nan inru ungalathu padhivugali parthen.. suberb..

  ReplyDelete

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க..

சிரிக்க

Blog Widget by LinkWithin